மறைந்த 1062 கழக உடன்பிறப்புகளுக்கு கலைஞர் குடும்ப நலநிதியாக 1 கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது | வெண்ணந்தூரில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் எம்.பி. ராஜேஷ்குமார்

Update: 2025-01-06 10:05 GMT

கலைஞர் குடும்ப நலநிதி 

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கடந்த ஆறுமாத காலத்தில் மறைந்த 1062 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு கலைஞர் குடும்ப நலநிதியாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.வெண்ணந்தூரில் நடைப்பெற்ற கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.பி.இராஜேஸ்குமார் பேச்சு ! 


வெண்ணந்தூர் ஒன்றியம் மற்றும் அத்தனூர் பேரூர் மற்றும் வெண்ணந்தூர் பேரூரில் கடந்த மார்ச் 2024 முதல் தற்பொழுது வரை மறைந்த 158 கழக உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு திராவிட சிந்தனை எழுத்தாளர் திரு.மதிமாறன் அவர்கள் முன்னிலையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் குடும்ப நல நிதியை வழங்கினார் 


நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் திரு.ஆர்எம்.துரைசாமி,பேரூர் கழக செயலாளர் திரு.கண்ணன்,மாவட்ட அயலக அணி அமைப்பாளர் திரு. விஜயபாஸ்கர், சார்பு அணி அமைப்பாளர்கள் திரு.சித்தார்த், திரு.கிருபாகரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் , வெண்ணந்தூர் ஒன்றிய துணை அமைப்பாளர் வித்யா சாகர் ,  இளம்பருதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதுவரை வழங்கப்பட்ட கழக கலைஞர்குடும்ப நலநிதி

மொத்தம் 1062


நாமக்கல் கிழக்கு நகரம் 36, நாமக்கல் மேற்கு நகரம் 25, நாமக்கல் தெற்கு நகரம் 32, நாமக்கல் ஒன்றியம் 49, மோகனூர் ஒன்றியம் 107,புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் 47, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம் 41, மோகனூர் பேரூர் 28, சேந்தமங்கலம் ஒன்றியம் 104, கொல்லிமலை ஒன்றியம் 29, எருமப்பட்டி ஒன்றியம் 70, சேந்தமங்கலம் பேரூர் 39, எருமப்பட்டி பேரூர் 3, சிராப்பள்ளி பேரூர் 20, நாமகிரிப்பேட்டை பேரூர் 61, காளப்பநாயக்கன்பட்டி பேரூர் 29, ராசிபுரம் நகரம் 27, ராசிபுரம் ஒன்றியம் 48, வெண்ணந்தூர் ஒன்றியம் 102, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் 93, அத்தனூர் பேரூர் 21, வெண்ணந்தூர் பேரூர் 35, பட்டணம் பேரூர் 4, பிள்ளாநல்லூர் பேரூர் 12 

Tags:    

Similar News