ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;

Update: 2025-09-28 08:50 GMT

CM Stalin

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை விஜய் பரப்புரை கூட்டத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் மாலையில் கரூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்திலும் தவெக தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். இரவு 7 மணி அளவில் விஜய் பேசத்தொடங்கிய நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 20 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மயங்கியவர்களை உடனடியாக மீட்ட போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Similar News