100 கோடி மதிப்புள்ள சொத்து கவுன்சிலர் வேதனை

Update: 2024-09-02 12:35 GMT

கவுன்சிலர் வேதனை

https://king24x7.com/preview/story-௧௧௭௧௨௬

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் முடக்கம் : மக்களுக்கு சுகாதார மையம் கட்ட இடமில்லையென கவுன்சிலர் வேதனை.


சென்னை 145வது வார்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான ரூ.100 மதிப்புள்ள இடம் தனியாரால் முடக்கப்பட்டிருப்பதாக கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


சென்னை 145வது வார்டு கவுன்சிலர் சத்தியநாதன், தனியார் திருமண்டபத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில் பேசிய அவர், “145வது வார்டில் கடந்த 50 ஆண்டுகளாக 1.14 ஏக்கர் மதிப்புள்ள அரசு நிலம் ஒன்று தனியார் நிறுவனம் ஒன்றின் வசம் இருந்து வருகிறது. அதை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மனு கொடுத்திருந்தோம். அங்கு ஆய்வு செய்த பின்னர், நிலத்தில் ஆதரவற்றோம் இல்லம் கட்டுவதற்காக குத்தகைக்கு எடுத்த நிறுவனம் சுற்றுசுவரை மட்டும் கட்டிவிட்டு கட்டடம் எதுவும் கட்டவில்லை என ஆட்சியர் உறுதி செய்தார். இதனால் அந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு அரசாணை வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் ஒரு சமூக நலக்கூடம், மகளிர் தொழில் மையம் மற்றும் சிறிய பூங்கா அமைக்க வேண்டும் என சென்னை மாமன்றத்தில் கவுன்சிலராக கோரிக்கை வைத்திருந்தேன். அதற்கு சமூகநலக்கூடம் அமைக்கப்படும் என மாமன்றத்தில் இருந்து எனக்கு பதிலும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் அரசு தரப்பில் சுமார் 800 சதுர அடியில் ஒவ்வொரு வார்டிலும் அரசு மருத்துவ சோதனை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எங்கள் வார்டில் 800 சதுர அடி அரசு இடம் இல்லை என அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சிடையந்த நான், 1.14 ஏக்கர் அரசு நிலம் இருப்பது தொடர்பாக நீதிமன்றத்தை நாடினேன்.

அப்போது நீதிமன்ற இடைக்கால உத்தரவு நகல் ஒன்று என்னிடம் தரப்பட்டது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் சார்ந்த ஆட்சியர்கள் அந்த இடத்தில் நுழையக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் வட்டாட்சியர் மெளணம் காத்துள்ளார். உரிய முறையில் அவர் வாதிடவில்லை. இதனால் இடம் இதுவரை அரசு தரப்பிடம் வரவில்லை. இதன் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா? என்பதை அறிந்து அரசு உடனே நிலத்தை மீட்க வேண்டும். இதனால் எங்கள் வார்டில் உள்ள ஒரு லட்சம் குடும்பத்தினர் எந்த வித அரசு திட்டத்தையும் பெற முடியாமல் உள்ளனர்” என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

Tags:    

Similar News