1,666 புதிய நியாய விலைக் கடைகள் ! 2021 முதல் 2024 வரை ..! தமிழக அரசின் சாதனைகள் என்ன ?

Update: 2025-01-04 06:21 GMT

தமிழ்நாடு அரசின் சாதனைகள் 

வறுமை ஒழிப்பில் ‘தமிழ்நாடு’ இந்தியாவில் முதலிடம்! ஒன்றிய அரசு பாராட்டு

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் திரா­விட மாடல் ஆட்­சி­யின் 40 மாதங்­க­ளில் கூட்­டு­றவு, உணவு மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத் துறை­யில் பல்­வேறு புதிய திட்­டங்­கள்தீட்­டப்­பட்டு மக்­கள் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­திடமாபெ­ரும் சாத­னை­கள் படைக்­கப்­பட்­டுள்­ளது.

1,666 புதிய நியாய விலைக் கடை­கள் திறக்­கப்­பட்­டுள்­ளன. 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 230 நெல் கொள்­மு­தல் நிலை­யங்­க­ளும், ரூ.359 கோடி­யில் மேல் கூரை­யு­டன் நெல் சேமிப்­புத் தளங்­க­ளும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.


இந்­தி­யா­வி­லேயே அதி­க­மான நெல் சேமிப்­புக் கிடங்­கு­கள் உள்­ள­தை­யொட்டி, தமிழ்­நாட்­டிற்கு ஒன்­றிய அரசு முதல் பரிசு வழங்­கிச் சிறப்­பித்­துள்­ளது. வறுமை ஒழிப்­பில் தமிழ்­நாடு இந்­தி­யா­வில் முத­லி­டம் ஒன்­றிய அரசு பாராட்­டுத் தெரி­வித்­துள்­ளது.

அதன் விவ­ரம் வரு­மாறு :–

தமிழ்­நாட்­டில் நெல், அரிசி உட்­பட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் இருப்பு நில­வ­ரங்­களை எப்­போ­தும் சீராக நிர்­வ­கித்­திட உத­வும் வகை­யில் வெளிச் சந்தை வர்த்­த­கம் உட்­பட அனைத்து வர்த்­தக நட­வ­டிக்­கை­ளை­யும் மேற்­கொள்­வ­தற்­காக முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கம் 1956ஆம் ஆண்டு கம்­பெ­னி­கள் சட்­டத்­தின்­படி 23.2.1972 அன்று நிறு­வப்­பட்­டது.


தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குக் குடும்ப அட்­டைக்கு 20 கிலோ அரிசி வழங்­கி­யது உட்­ப­டப் பல்­வேறு திட்­டங்­கள் சிறப்­பாக நிறை­வேற்­றப்பட்­டன.

தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­பின் உணவு மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத்­துறை வாயி­லாக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள புதிய திட்­டங்­க­ளால் தமிழ்­நாட்­டி­லி­ருந்து வறுமை முற்­றி­லும் அகற்­றப்­பட்டு மக்­கள் பசிப்­பிணி ஒழிந்து வள­மான வாழ்­வில் மகிழ்ச்சி கொண்­டுள்­ள­னர்.


ஒன்­றிய அர­சின் ஆய்வு அறிக்­கை­கள் வாயி­லாக வறுமை ஒழிப்­பில் தமிழ்­நாடு இந்­தி­யா­வில் முத­லி­டம் பெற்­றுள்­ளது எனக் குறிப்­பி­டப்­பட்டு பாராட்­டப்­பட்­டுள்­ளது. கடந்த 40 மாதங்­க­ளில் உணவு மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத்­து­றை­யில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள முக்­கி­யப் பணி­கள் விவ­ரம் :

உணவு பொருள் வழங்­கல் துறை குறை தீர்ப்­புப் பணி­கள்!

மாதாந்­திர பொது விநி­யோ­கத்­திட்ட குறை­தீர்க்­கும் நாள் முகாம்­கள் நடத்­தப்­பட்டு நகல் அட்டை, புதிய குடும்ப அட்டை, முக­வரி மாற்­றம், பெயர் சேர்த்­தல். உள்­ளிட்ட 1 இலட்­சத்து 83 ஆயி­ரத்து 610 கோரிக்­கை­கள் பெறப்­பட்டு அனைத்­துக் கோரிக்­கை­க­ளும் நிறை­வேற்­றப் பட்­டுள்­ளன.

கொரோனா பெருந்­தொற்­றுக் காலத்­தில் பொது மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாது­காக்க நிவா­ர­ணத் தொகை­யாக ரூ.4,000/-– வீதம் 2 கோடியே 8 இலட்­சத்து 14 ஆயி­ரத்து 528 அரிசி பெறும் குடும்ப அட்­டை­தா­ரர்­­களுக்கு வழங்­கப்­பட்­டது


கொரோனா பெருந்­தொற்­றுக் காலத்­தில் நியாய விலைக் கடை­க­ளின் மூலம் 14 மளி­கைப் பொருள்­கள் அடங்­கிய தொகுப்பு 2 கோடியே 7 இலட்­சத்து 70 ஆயி­ரத்து 726 அட்­டை­தா­ரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளைத் தகு­தி­யான பய­னா­ளி­க­ளுக்கு அளிக்­கும் பொருட்டு கைவி­ரல் ரேகை பதிவு முறை ஏற்­ப­டுத்­தப்­பட்டு, ஆதார் எண்­கள் குடும்ப அட்­டை­கள் இணைக்­கப்­பட்­டுள்­ளன.

புதிய நியா­ய­வி­லைக் கடை­கள் திறப்பு!



தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் அறி­வு­ரைப்­படி, ஏழை எளிய பொது­மக்­க­ளின் வச­திக்­காக அவர்­க­ளு­டைய குடி­யி­ருப்­பு­க­ளுக்கு அரு­கி­லேயே நியாய விலைக் கடை­கள் அமைக்­கப்­பட வேண்­டும் என்­ப­தற்­காக 633 முழு­நேர நியாய விலைக் கடை­க­ளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடை­க­ளும் ஆக மொத்­தம் 1,666 நியாய விலைக் கடை­கள் புதி­தா­கத் திறக்­கப்பட்­டுள்­ளன.

31.12.2023 வரை நியாய விலைக் கடை­­களின் உட்­புற மற்­றும் வெளிப்­பு­றச் சூழலை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பணி­கள் 2,778 நியாய விலைக் கடை­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சிறு­தா­னிய உணவு குறித்த விழிப்­பு­ணர்வு!

2023ஆம் ஆண்டு சர்­வ­தே­சச் சிறு­தா­னிய ஆண்­டாக ஐ.நா.சபை­யி­னால் அறி­விக்­கப்­பட்­டது. அதைத் தொடர்ந்து, மாநில மற்­றும் மாவட்ட அள­வில் சிறு­தா­னிய உண­வுத் திரு­விழா நிகழ்ச்­சி­கள் ரூ.40 இலட்­சம் நிதி ஒதுக்­கீட்­டில் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் சிறப்­பா­கக்கொண்­டா­டப்­பட்டு மக்­க­ளி­டையே சிறு­தா­னிய உணவு குறித்த விழிப்­பு­ணர்வு வளர்க்­கப்­பட்­டது.

விவ­சா­யி­கள் விளை­விக்­கும் நெல்­லினை இடைத்­த­ர­கர்­கள் தலை­யீ­டின்­றி­யும் கால தாம­த­மின்­றி­யும் உட­ன­டி­யாக விற்­பனை செய்­யும் பொருட்டு ஆன்­லைன் பதிவு முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு 1 கோடியே 8 இலட்­சத்து 35 ஆயி­ரத்து 621 மெ.டன் நெல் கொள்­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

விருப்­பப்­படி அரி­சிக்­குப் பதில் கோதுமை!

அரிசி பெறும் அனைத்­துக் குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் விருப்­பத்­தின் அடிப்­ப­டை­யில் மாந­க­ராட்­சிப் பகு­தி­க­ளில் 10 கிலோ வீத­மும். ஏனைய பகு­தி­க­ளில் 5 கிலோ வீத­மும் நியாய விலைக் கடை­க­ளின் இருப்­பைப் பொறுத்து அவர்­க­ளது விருப்­பத்­தின்­படி அரி­சிக்­குப் பதி­லா­கக் கோதுமை விலை­யில்­லா­மல் வழங்­கப்­ப­டு­கி­றது. இது­வரை 7 இலட்­சத்து 23 ஆயி­ரத்து 482 மெ.டன் கோதுமை விலை­யில்­லா­மல் குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்­கு­வ­ழங்­கப்­பட்­டுள்­ளது.

புயல் பாதித்­த­போது திரா­விட மாடல் அரசு வழங்­கிய நிவா­ர­ணம்!

கடந்த 2023 ஆம் ஆண்­டில் டிசம்­பர் 3 மற்­றும் 4 ஆகிய தினங்­க­ளில் வீசிய மிக்­ஜாம் புய­லி­னால் ஏற்­பட்ட கன­ம­ழை­யி­னால், சென்னை, திரு­வள்­ளூர். காஞ்­சி­பு­ரம் மற்­றும் செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளில் வெள்­ளத்­தி­னால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு தலா ரூ.6,000/- வீதம் வழங்­கப்­ப­டும் என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­த­படி 23 இலட்­சத்து 18 ஆயி­ரத்து 200 குடும்­பங்­க­ளுக்கு ரூ.1,390.92 கோடி மாநில பேரி­டர் நிவா­ரண நிதி­யி­லி­ருந்து நிவா­ரண நிதி­யாக வழங்­கப்­பட்­டது.

தென் மாவட்­டங்­கள் புய­லால்பாதித்­த­போது வழங்­கப்­பட்ட நிவா­ர­ணம்!

தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­த­படி 17.12.2023, 18.12.2023 ஆகிய இரு தினங்­க­ளில் திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி மற்­றும் தென்­காசி ஆகிய மாவட்­டங்­க­ளில் பெய்த அதி­கன மழை­யி­னால் திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி மாவட்­டங்­க­ளில் மிகக் கடு­மை­யாக வெள்­ளப் பாதிப்பு ஏற்­பட்­டுள்ள வட்­டங்­க­ளில் இரண்டு நாட்­க­ளுக்கு மேல் வெள்­ளம் சூழ்ந்து துணி­ம­ணி­கள் / பாத்­தி­ரங்­கள், வீட்டு உப­யோ­கப் பொருள்­களை இழந்த 6 இலட்­சத்து 36 ஆயி­ரத்து 971 குடும்­பங்­க­ளுக்கு ரூ.6,000/–- மற்­றும் 5 கிலோ அரிசி வீதம் வழங்­கப்­பட்­டது மேலும், திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி கன்­னி­யா­கு­மரி மற்­றும் தென்­காசி ஆகிய மாவட்­டங்­க­ளில், இதர வட்­டங்­க­ளில், வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்ட மொத்­தம் 13 இலட்­சத்து 34 ஆயி­ரத்து 561 குடும்­பங்­க­ளுக்கு தலா ரூ.1,000/–- வீதம் 92சத­வீ­தப் பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

கருணை அடிப்­ப­டை­யில் நிய­ம­னங்­கள்!

தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­தில் பணி­பு­ரிந்து பணி­யின்­போது இயற்கை எய்­திய பணி­யா­ளர்­க­ளின் வாரி­சு­தா­ரர்­க­ளுக்­குக் கருணை அடிப்­ப­டை­யில் 233 பேர்­க­ளுக்­குப் பணி­நி­ய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஒப்­பந்­தப் பணி­யா­ளர் நிரந்­த­ரம்!

தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­தில் 2012 ஆம் ஆண்டு முதல் பரு­வ­கா­லப் பணி­யா­ளர்­க­ளா­கப் பணி­பு­ரிந்து வந்­த­வர்­­களுக்கு 12(3) ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் 591 பணி­யா­ளர்­கள் நிரந்­த­ரப் பணி­யா­ளர்­ க­ளா­கப் பணி நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­க­ளுக்­குக் கட்­ட­டங்­கள்!

திரா­விட மாடல் அரசு விவ­சா­யி­க­ளின் நலன் கருதி, நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­க­ளுக்­குப் படிப்­ப­டி­யா­கக் கட்­ட­டங்­க­ளைக் கட்டி வரு­கி­றது. 40 மாதங்­க­ளில் 230 நெல் கொள்­மு­தல் நிலை­யக் கட்­ட­டங்­கள் 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்டு, இது­வரை 130 நெல் கொள்­மு­தல் நிலை­யங்­க­ளுக்­குக் கட்­ட­டங்­கள் கட்டி முடிக்­கப்­பட்டு எஞ்­சி­ய­வற்­றின் கட்­டு­மா­னப் பணி­கள் பல்­வேறு நிலை­க­ளில் முன்­னேற்­றத்­தில் உள்­ளன.

முத­ல­மைச்­சரின் கருணை மனம்!

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விவ­சா­யி­க­ளின் கடின உழைப்­பால் விளை­விக்­கப்­பட்டு, கொள்­மு­தல் செய்­யப்­ப­டும் ஒரு நெல்­மணி கூட வீணா­கக் கூடாது என்ற கருணை மன­தோடு 358.78 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 259 மேற்­கூரை அமைப்­பு­டன்­கூ­டிய நெல் சேமிப்­புத் தளங்­களை நிறுவ ஆணை­யிட்­டுள்­ளார்­கள். அதன்­படி, 213 நெல் சேமிப்­புத் தளங்­கள் கட்­டப்­பட்டு எஞ்­சி­யவை கட்­டப்­பட்டு வரு­கின்­றன.

தமிழ்­நாட்­டிற்கு முதல் பரிசு!

புது­டெல்­லி­யில் உள்ள தேசிய கிடங்கு மேம்­பாட்டு ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின் கீழ் அதிக எண்­ணிக்­கை­யி­லான சேமிப்­புப் கிடங்­கு­க­ளைப் பதிவு செய்­த­தற்­கா­கத் தமிழ்­நாடு சேமிப்­புக் கிடங்கு நிறு­வ­னத்­திற்கு ஒன்­றிய அரசு முதல் பரிசு வழங்­கிப் பாராட்­டி­யுள்­ளது.

இப்­படி ஒவ்­வொரு துறை­யி­லும் பாராட்­டு­ க­ளைப் பெற்­று­வ­ரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அரசு, உண­வுத் துறை­யில் தன்­னி­றைவு அடை­வ­தற்­கா­கப் புதிய பல திட்­டங்­கள் தந்து தமிழ்­நாட்டு மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­திச் சாத­னை­கள் நிகழ்த்தி அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்து வரு­வது குறிப்­பி­டத்தக்­கது.

Tags:    

Similar News