அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் | King news 24x7

தமிழ் நாடு நிதி நிலை அறிக்கை
பத்து லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்.
அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய திட்டம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும்.
ரூ.150 கோடியில் புராதானக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்
திருவான்மியூர் - உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 14.2 கி.மீ நீளம்.
ரூ.2,100 கோடியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைக்கப்படும்.
ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.