தக்கலையில் விஜய்வசந்த் எம்பி உட்பட 217 பேர் மீது வழக்கு பதிவு
பிரதமர் வருகையை எதிர்த்து தக்கலையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த விஜய் வசந்த் எம்.பி உட்பட 217 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கலையில் காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.எந்த ஒரு அனுமதியும் இன்றி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உட்பட 217 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.