பாச்சலூர் கிராமத்தில் வழக்கம் போல் காட்சிய‌ளிக்கும் கட்சி கொடி கம்பம்

பாச்சலூர் கிராமத்தில் வழக்கம் போல் கட்சி கொடி கம்பம், அரசியல் போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளது.

Update: 2024-03-18 14:44 GMT

பறக்கும் கட்சி கொடி 

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதால்,தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது, குறிப்பாக‌ ஏப்ர‌ல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் இருப்பதால் வரும் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் ஒன்றாக உள்ள பாச்சலூர் கிராமத்தில் வழக்கம் போல் கட்சி கொடி கம்பங்கள், கட்சி கொடி,பிளக்ஸ் பேனர்,சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவைகள் அகற்றபடாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டிவருகின்றனர்.

இதனை முறைப்ப‌டுத்தாத‌வ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆணைய‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை எழுந்துள்ள‌து.

Tags:    

Similar News