த.வெ.க.வில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜூனா
த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜூனா அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார். விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, "எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன். இணைப்பு என்பதை தாண்டி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசனை செய்து கொண்டு இருக்கிறேன்," என்று தெரிவித்தார். தொடர்ந்து, "த.வெ.க.-வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு விரைவில் செய்தியாளர்களை சந்தித்து என்ன முடிவு என்பதை அறிவிக்கிறேன்," என்று தெரிவித்தார். முன்னாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததற்காக வி.சி.க.-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.