சபதத்தை நிறைவேற்றிய அண்ணாமலை

Update: 2024-12-27 07:58 GMT

அண்ணாமலை 

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது ...

எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன்."

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். வெளியாவது, முதலில் இரு நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவித்து பிறகு ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றது, சம்பவத்தின் போது ஞானசேகரன் செல்போனில் யாரிடமோ, 'சார்' என பேசியதாக முதலில் தகவல் வெளியானது, பிறகு அவர் போனை ஃப்ளைட் மோடில் வைத்துவிட்டு போலியாக பேசினார் என்று தகவல் வெளியானது என பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது.மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுக நிர்வாகி என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததும், அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்திருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.



இந்நிலையில், நேற்று கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில் அவர், "எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன். தொண்டர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள், வீட்டு வாசலில் நின்றால் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை. நடுத்தர மக்கள் வெளியில் வர வேண்டும். மீடியாவில் இதை விவாதிக்க வேண்டும். இதைப் பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, சொன்னது போலவே, கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். 6 முறை எனக் கூறிய நிலையில், மொத்தம் 8 முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்து உடலை வருத்திக் கொண்டார்

9ம் முறை அடிக்க முயன்றபோது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரைத் தடுத்த நிறுத்தினர். முன்னதாக, வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்த ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.



Tags:    

Similar News