திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னையில் பேரணி நடத்த அனுமதி தர முடியாது ! | கிங் நியூஸ் 24x7

Update: 2025-02-15 06:24 GMT

தமிழ்நாடு அரசு 

திருப்­ப­ரங்­குன்­றம் விவ­கா­ரத்­தில் சென்­னை­யில் பேரணி நடத்த அனு­மதி தர முடி­யாது என்று பாரத் இந்து முன்­னணி தாக்­கல் செய்த மனுவை சென்னை உயர்­நீ­தி­மன்­றம் தள்­ளு­படி செய்­துள்­ளது. மத நல்­லி­ணக்­கத்­திற்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தும் எந்த போராட்­டத்­திற்­கும் அனு­மதி வழங்­கக் கூடாது என்றும் நீதி­மன்­றம் திட்­ட­வட்­ட­ மாக தெரி­வித்­துள்­ளது.


இது­தொ­டர்­பான வழக்கு உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி இளந்­தி­ரை­யன் முன்பு விசா­ர­ணைக்கு வந்தது.


அப்­போது அரசு தரப்­பில் ஆஜ­ரான மாநில அரசு தலைமை குற்­ற­வியல் வழக்­க­றி­ஞர் அசன் முக­மதுஜின்னா, ஏற்­க­னவே திருப்­ப­ரங்­குன்­றம்உரிமை குறித்துபியூ கவுன்­சில் வரை சென்று முடிவு செய்­யப்­பட்டுவிட்­ட­தா­க­வும் அதன் பின்­னர் அது­கு­றித்து மீண்­டும் பிரச்சினை எழுப்­பு­வது சரி­யில்லை என்று தெரி­வித்­தார். மனு­தா­ரர் கேட்­டுள்ள பாதை என்­பது போக்­கு­ வ­ரத்து நெருக்­கடி நிறைந்த சாலை என்­கிற கார­ணம் மட்­டுன்றி, வேறுஎந்த இடத்­தி­லும் பேர­ணிக்கு அனு­மதிவழங்­கி­னா­லும் தேவை­யற்ற விரும்ப தகாதபிரச்சினையை உரு­வாக்­கும் என்­றும் வாதிட்­டார்.


வழக்கை விசா­ரித்த நீதி­பதி, திருப்­ப­ரங்­குன்­றம் பிரச் சி­னைக்­கும், சென்­னைக்­கும் என்ன தொடர்பு? தேவை­யில்­லா­மல் பிரச்சினையைஉரு­வாக்கப் பார்க்­கி­றீர்­கள் என கண்­ட­னம் தெரி­வித்­தார். சென்­னை­யில் பேரணி நடத்த அனு­ம­திக்க முடி­யாது என்று கூறி பாரத் இந்து முன்­னணி தாக்­கல் செய்த மனுவை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி தள்­ளு­படி செய்து உத்­த­ர­விட்­டார்.

Tags:    

Similar News