பாஜக நடத்துவது ரோடு ஷோ அல்ல ஏமாற்று ஷோ -ஆர்.பி உதயகுமார்

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டி. நாராயணசாமிக்கு வாக்குகள் சேகரித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் பாஜக நடத்துவது ரோடு ஷோ அல்ல ஏமாற்று ஷோ என விமர்சனம் செய்தனர்.

Update: 2024-04-15 13:42 GMT

முன்னாள் அமைச்சர் பிரச்சாரம் 

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டி. நாராயணசாமிக்கு வாக்குகள் சேகரித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் பாஜகவினர் தமிழகத்தில் நடத்துவது ரோடு ஷோஅல்ல அது ஒரு ஏமாற்று ஷோ அண்ணாமலை டெல்லி தலைவர்களை ஏமாற்றுவதற்காக இங்கு ரோடு ஷோநடத்தி ஆதரவு இருப்பது போல் காட்டிக் கொண்டிருக்கிறார் ஏப்ரல் 19ஆம் தேதி மக்கள் இதற்கு விடை தருவார்கள் என்று பேசினார் இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News