துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2024-11-20 07:24 GMT
துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

udhayanithi stalin

  • whatsapp icon

துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உதயநிதி கதாநாயகனாக நடிக்க ஏஞ்சல் என்ற படம் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு 2018-ல் படப்பிடிப்பு துவங்கப்பட்டதாகவும், 20% படப்பிடிப்பு நடத்த எஞ்சியிருந்த நிலையில் மாமன்னன் கடைசி படம் என அறிவித்ததை எதிர்த்து ராமசரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார். தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தெளிவில்லாத மனுவை நிராகரிக்க வேண்டும் என உதயநிதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உதயநிதி கோரிக்கையை ஏற்று ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags:    

Similar News