கும்பகோணத்தில் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி: பரிசளிப்பு விழா

கும்பகோணத்தில் 13வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 36 ஆவது சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ரோட்டரி கவர்னர் விருது வழங்கி பாராட்டினார்.

Update: 2024-05-16 10:05 GMT

பரிசு வழங்கல் 

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 36 ஆவது சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ரோட்டரி கவர்னர் பாலாஜி விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். 

 தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் கும்பகோணத்தில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 36 ஆவது சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற சதுரங்க போட்டியை கும்பகோணம் அன்பழகன் எம் எல் ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

கடந்த 12-ந் தேதி வரை நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700 க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்து வெற்றி பெற்ற வீரர்கள் மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரோட்டரி முன்னாள் ஆளுநர் பாலாஜி கலந்துகொண்டு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

 இதில் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் இணை செயலாளர் செந்தில்குமரன் பழனிவேலு தலைமை நடுவர் சதீஷ் தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் செயலாளர் தரும. சிலம்பரசன் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கணேசன் விழா குழு ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News