காப்புகாட்டில் முறைகேட்டை கண்டித்து சிஐடியு போராட்டம்

உணவு பொருள் வழங்கல் கிடங்குகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் காப்புகாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-01 15:42 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

குமரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் சுமார் 630 நியாய விலைக் கடைகள் உள்ளன. இந்த நியாய விலை கடைகளுக்கு மாதந்தோறும் சுமார் 10,000 டன் அரிசி கிடங்கில் இருந்து வழங்கப்படுகிறது.

50 கிலோ மூட்டை களில் எடை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.எடை குறைவாக பொருட்களை வழங்கிவிட்டு இருப்பு குறைவு என காரணம் காட்டி ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது.

அரிசி முடைக்கு சுமார் இரண்டு கிலோ முதல் ஏழு கிலோ வரையம் பருப்பு முடைக்கு 5 கிலோ வரையும் பாமாயில் எண்ணம் குறைவாகவும் அரிசி கிட்டங் கியில் இருந்து ரேஷன் கடைக்கு அனுப்பப்படுகிறது என புகார் உள்ளது. இதை கண்டித்து, புதுக்கடை அருகேயுள்ள காப்புக் காடு நுகர்பொருள் வாணிபகிடங்கி முன்பு சி ஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News