உதயநிதியை துணை முதலமைச்சராக்க காய் நகர்த்தும் ஸ்டாலின்...?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க சைலண்டாக வேலைகள் நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது.

Update: 2024-01-09 05:42 GMT

DMK Stalin, Udayanidhi

ஜனவரி 3வது வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு ஒன்று எடுக்க இருப்பதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க சைலண்டாக வேலைகள் நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது.

ஜனவரி 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் பலர் இருக்க விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தது பேசியது அரசியலில் கவனத்தை ஈர்த்தது. இது மட்டும் இல்லாமல் அண்மையில் நடந்த புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இறுதிக்கட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். 

இதேபோன்று, தமிழக அரசு தரப்பில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் மற்ற மூத்த அமைச்சர்கள் பங்கேற்கிறார்களோ இல்லையோ ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு என முன்னிருக்கை காத்திருக்கும். அண்மைக்காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில், அவரது மகனான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்துவது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டும் வருகிறது.

முதலில் சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இருந்த உதயநிதி ஸ்டாலினை ஓராண்டு ஆட்சிக்கு பிறகு தனி இலாக்கா உருவாக்கி அமைச்சர் பொறுப்பு வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது மாநில அரசியலிலும், தேசிய அரசியலும் கவனம் ஈர்க்கும் நபராக உதயநிதி ஸ்டாலின் வலம் வருவதுடன், அவரை  துணை முதலமைச்சராக வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கும் வேலைகளும் ரகசியமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் செங்கல் தூக்கி வைரலான உதயநிதி ஸ்டாலின், அண்மையில் சனாதனம் பற்றி பேசி தேசிய அளவில் பேசப்பட்டார். அதிகமாக விமர்சனங்களை எதிர்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் கவனத்தை தன் மீது ஈர்க்கிறார். இதனால் திமுகவில் 50 ஆண்டுகளாக கட்சியும், ரத்தமாக இருக்கும் முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். 

இந்த சூழலில் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்டு வருகிறார். கடந்த நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலமைச்சரை, அவரது பணிகளை குறைத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காலங்களில் நோயாளிகளை நேரில் சந்தித்தது, மழை வெள்ளங்களில் ஆய்வு செய்தது போன்றவற்றால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் வெளிநாட்டுக்கு சென்று தனது உடலை பரிசோதித்து கொள்ள நெருங்கிய சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே மக்களை தேர்தல் வர உள்ளதால் அதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு உடல்நல பரிசோதனை செய்து கொள்ள செல்வார் என்று கூறப்படுகிறது. அப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்றால், தமிழகத்தில் ஆட்சியை வழிநடத்திட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல்களும் திமுக வட்டாரத்தில் தகவல்கள் கசிகிறது. 

கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் திமுக கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் நிறுத்தப்பட்டாரோ அதேபோல் தனது காலத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டமாக உள்ளது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

Tags:    

Similar News