முன்னாள் பாரத பிரதமருக்கு நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
By : King 24x7 Website
Update: 2023-11-01 10:35 GMT
இந்திராகாந்தி நினைவுதினம்
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டம், சங்ககிரியில் முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி நினைவுதினத்தினையொட்டி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் தலைமையில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதைசெலுத்தினர். சங்ககிரி வட்டாரத் தலைவர் சரவணன், நகரத் தலைவர் ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் மணி, நிர்வாகிசுப்ரமணியம், மாவட்ட பொது செயலாளர்கள் நடராஜன், காசிலிங்கம், ராமமூர்த்தி, சின்னுசாமி, செங்கோட்டுவேலு, இஸ்மாயில், அண்ணாமலை, ஆறுமுகம்,சந்திரன் முருகேசன், லோகநாதன், விஸ்வநாதன், குமார், நாசர், ரங்கராஜ், காமராஜ், ஜெகநாதன், கார்த்தி, கிரி, மாணவர் அணி நிர்வாகிகள் அகில், வீராசாமி, ராஜு, வெங்கட் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.