மின்கட்டண வசூலில் தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவது தவறு: அண்ணாமலை
2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் தமிழகத்தை, மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவது தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Desk
Update: 2024-07-23 10:36 GMT
2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் தமிழகத்தை, மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவது தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாதம் ஒரு முறை மின்கட்டணம் வசூலித்தால் ஒவ்வொரு குடும்பத்தினரும் 6 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்றும் தமிழகத்தில் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.