முன்னாள் அமைச்சருக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
15ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 07:59 GMT
புதுக்கோட்டை நீதிமன்றம்
தமிழக முன்னாள் சுகாதாரத் அமைச்சர். டாக்டர். சி. விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக 36 கோடி ரூபாய் அதிகமாக சேர்த்தது குறித்த வழக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது இந்நிலையில் அவர் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டிருந்தது ஆனால் இன்று அவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்த அங்கு சென்றுள்ளதால் இன்று கோர்ட்டில் ஆஜாகவில்லை என அவரது வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர் இதனை யடுதது புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.