திமுக-வை அழிப்பேன் என்று பலர் கிளம்பியிருக்காங்க: உதயநிதி ஸ்டாலின்

திமுக-வை அழிப்பேன் என்று பலர் கிளம்பியிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-11-07 08:38 GMT
திமுக-வை அழிப்பேன் என்று பலர் கிளம்பியிருக்காங்க: உதயநிதி ஸ்டாலின்

udhayanithi stalin

  • whatsapp icon

பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சைக்கு சென்றுள்ளார். அங்கு தஞ்சை மத்திய மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு அவர்களின் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் சிறிது நேரம் உரையாற்றினார். அதில் திமுக-வை அழிப்பேன் என்று பலர் கிளம்பி உள்ளனர். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளனர். இதுதான் நம் எதிரிகளுக்கு எரிச்சலை தருகிறது. தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாம் பெருகின்ற தொடர் வெற்றிதான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை தருகிறது. அதிமுக அணி தற்போது பல்வேறு அணியாக பிரிந்துள்ளது. இப்படி தனித்தனியாக நிற்கும் அதிமுகவும் யாருமே சீண்டாத பாஜவும், எப்படியாவது திமுக கூட்டணியில் விரிசல் விழாத என துண்டை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்று நம் தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கூறியுள்ளனர். 2026-ல் கழகம் மீண்டும் வென்றது. கழக தலைவர் 2-வது முறையாக முதலமைச்சர் ஆனார். திமுக 7-வது முறையாக ஆட்சியை அமைக்கிறது என்ற வரலாற்றை உருவாக்குவோம் என கூறினார்.

Tags:    

Similar News