திமுக -காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும் - மோடி
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எடுபடாது. திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். திமுக -காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம் என கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.
பின்பு பேச தொடங்கிய பிரதமர், என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:- தமிழக மண்ணில் நான் ஒரு மாபெரும் மாற்றத்தை காண்கிறேன். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கர்வத்தை தமிழகம் அடக்கும் கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பி இருக்கிறது.
நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டதை போலவே தமிழக மக்களும் செய்வார்கள். 1991 இல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் சென்ற நான் தற்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எடுபடாது. திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். திமுக -காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே விருப்பம்.
திமுக மற்றும் காங்கிரஸின் கர்வத்தை தமிழக மக்கள் தேர்தலில் அடக்குவர். தமிழக மண்ணில் மாபெரும் மாற்றம் பெற்றுள்ளது என்னால் உணர முடிகிறது. இந்தியா கூட்டணி ஊழல் செய்வதற்கு தான் போராடுகிறது. 2ஜி ஊழல் முறைகேட்டில் பெரும் பங்கு வகித்தது திமுக தான். பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டு வந்தோம். ஆனால் இந்தியா கூட்டணியில் 2ஜியில் ஊழல் செய்தது. பாரதிய ஜனதா கன்னியாகுமரியை நேசிக்கிறது. திமுக -காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. கன்னியாகுமரி -திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடத்தை பாஜக அரசு செயல்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூபாய் 15,000 கோடியில் புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்களின் நலனுக்காக பாஜக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. வ.உ.சி துறைமுகம் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை பாஜக அரசு புதுப்பித்து வழங்கி இருக்கிறது. ராணுவ ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்தவர்கள் இந்தியா கூட்டணியினர். இந்தியா கூட்டணியினரின் ஊழல்களை பட்டியலிட்டால் அது மிகவும் நீளமானது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி அகற்றிவிட்டு பாஜக ஆட்சியை தமிழகம் மக்கள் கொண்டு வருவர்”என பேசினார்.