தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் அடமானம் வைத்தவர் தான் எடப்பாடி

தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் அடமானம் வைத்தவர் தான் எடப்பாடி என செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-02 17:22 GMT
கூட்டத்தில் பேசும் செல்வ பெருந்தகை 


2024 நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி பகுதியில் தேர்தல் பரப்புரை, பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை   கலந்து கொண்டு இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது உதய் மின் திட்டத்தில் சேர மாட்டேன் என நிராகரித்தார் ஆனால் உதை மின் திட்டத்தில் கையெழுத்திட்டு மின்சார கட்டண உயர்வுக்கு காரணமாக இருந்தவர் மின்சார வாரிய கொள்கைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என குற்றம் சாட்டினார். 

தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பவர் மோடி அதற்கு துணையாக நின்றவர் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து பத்து ஆண்டுகள் ஆகிறது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைப்பேன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார் ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றியவர் எனவும் இவர் ஆட்சிக்கு வரும்போது அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் 609 வது இடத்தில் இருந்தார் ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்கு,

பிறகு உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் வளங்களை அதானி இடம் ஒப்படைத்து விட்டார் அதானி வளர்ச்சி  2229 சதவீதம் உலக அறிஞர்கள் கட்டுரையாக எழுதியுள்ளனர்.  இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சரளா சேதுராமன்,  மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News