பங்காரு அடிகளார் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
மேல்மருத்துவர் பங்காரு அடிகளாரின் மறைவையடுத்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது குடுமபத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும் ஆன்மீக குருவமான அருள் திரு பங்காரு அடிகளார் கடந்த 19-ஆம் தேதி உடல் நல குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் உள்ளிட்டோர், அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தற்பொழுது பங்காரு அடிகளாரின் ஜீவசமாதி கோவில் கருவறை அருகே அருள்திரு பங்காரு அம்மா குரு மண்டபத்தில், கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு வந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஜீவ சமாதிக்கு சென்று மரியாதை செய்து வழிபட்டார். மேலும் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து கோவில் வளாகத்திற்குள் பஞ்ச தீபம் ஏற்றினார். பின்னர் அடிகளார் இல்லம் சென்ற அவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு ஏராளமான அதிமுகவினர் கோவில் வளாகத்திற்குள் கூடியிருந்தனர்.