குடிநீர்-சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூரில் 3 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

குடிநீர்-சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூரில் 3 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2024-11-29 09:41 GMT

Edapadi palanisamy

குடிநீர்-சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூரில் 3 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது அறிவிப்பில், தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டணம் உயர்வு, குப்பை வரி விதித்தல் என்று பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியதைக் கண்டித்து, அ.தி.மு.க.வின் சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. திருப்பூர் மாநகராட்சியின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை, திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கழக குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி அவர்கள் தலைமையில், கழகத்தைச் சேர்ந்த 17 மாமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைப்பார். கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி பழச்சாறு வழங்கி முடித்து வைப்பார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News