தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி கூடாது: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-04 10:27 GMT

Edapadi Palanisamy

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் 2,025 பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வேல் வழங்கினர். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற முதல்வரின் கூற்று பொய்யாகும். முதலமைச்சரின் எண்ணம் நடக்காது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி. அ.தி.மு.க. வலுப்பெற்றுள்ளது, அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மன்னராட்சி மீண்டும் அமைவதற்கு நாம் துணை நிற்க கூடாது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தலாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களை தங்களது குழந்தைகளாக பார்த்தார்கள். மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள். மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே. அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்பதவிக்கு வரக்கூடாது. அ.தி.மு.க. என்பது தொண்டர்களுக்கு சொந்தமான கட்சி. இந்த நிலை எந்த கட்சியிலும் இல்லை. 234 தொகுதிகளுக்கும் திட்டங்களை செயல்படுத்திய கட்சி அதிமுக. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கியது திமுக. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கால்நடை பூங்கா திட்டத்தை முடக்கினர். ஏழைகளுக்காக கொடுக்கப்படும் திட்டத்தில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி? குடிமராமத்து திட்டத்தை கூட கைவிட்டு விட்டனர். மக்களுடைய வரிப்பணத்தை தான் மக்களுக்கு கொடுக்கின்றனர். அ.தி.மு.க. போராடும் என தெரிவித்த பின்னரே மகளிர் உரிமை தொகையை வழங்கினர் என்றார்.

Tags:    

Similar News