பாஜகவிற்கு நோட்டாவை விட குறைந்த வாக்குகள் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் போகும் என்பதைவிட நோட்டாவை விட குறைவான வாக்குகளை பாஜக வேட்பாளர்கள் பெறுவார்கள். பாஜக ,அதிமுக தனித்தனியாக நின்றாலும், ஒன்றாக சேர்ந்து நின்றாலும் சரி இருவரும் சுடுகாட்டிற்கு தான் போவார்கள் , இரண்டு கட்சியும் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தான் சந்திப்பார்கள் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

Update: 2024-02-02 03:38 GMT

ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் போகும் என்பதைவிட நோட்டாவை விட கேவலமான வாக்குகளை பாஜக வேட்பாளர்கள் பெறுவார்கள் என கூறினார். பாஜக - அதிமுக தனித்தனி நின்றாலும், ஒன்றாக சேர்ந்து நின்றாலும் சரி இருவரும் சுடுகாட்டிற்கு தான் போவார்கள் , இரண்டு கட்சியும் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தான் சந்திப்பார்கள் என்றார் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
Tags:    

Similar News