கும்பகோணத்தில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

கும்பகோணம் மாநகரம் 02வது பகுதி கழக திமுக சார்பில் கும்பகோணத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-10 12:44 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

கும்பகோணம் மாநகரம் 02வது பகுதி கழக திமுக சார்பில் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கும்பகோணம் மாநகர 02வது பகுதி கழக செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். 10வது வட்ட செயலாளர் திருமலை வரவேற்றார். மண்டல குழு தலைவர் மனோகரன், பகுதி கழக நிர்வாகிகள் காமேஷ், மாணிக்கம், ஞானபண்டிதன், பாஞ்சாலை, இளம்பரிதி, சுரேஷ், சண்.கணேசன், ஸ்நேகம் கண்ணன், செல்வராஜ் மற்றும் பிரகாஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இதனைத்தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா பேசியதாவது :- மனிதர்களில் பல வகை இருக்கின்றனர். அந்த வகையில் தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் நிகழ்வு எடுக்கிறோம் என்றால் இயற்கைக்கு நன்றி சொல்கிறோம். தலைவருக்கு வாழ்வு கொடுத்தது. மங்கையராய் பிறப்பதற்கு தனி மாதவம் செய்திடவேண்டும் என்ற பாடலை அடிக்கோல் காட்டி மகளிர் அனைவரும் தளபதிக்கு நன்றி கூறும் நாள் மகளிர் தினம். இந்த நல்ல நாளில் ஒரு சில நாசமானவர்களை பற்றி பேச வேண்டிய சூழ்நிலை. தமிழ்நாட்டில் பல்வேறு முறை மோடி வருகிறார். "முத்தக்காட்சியில் விளம்பரம் தேடிய காட்சியல்ல, இரத்த சாட்சியில் சரித்திரம் படைத்த கட்சி". திமுகவை அழிப்போம் ஒழிப்போம் என்று சொன்னவர்கள் அழிந்து தான் போயிருக்கிறார்கள். திமுகவை அழிக்க நினைப்பவர்கள் கல்லறையில் தான் இருக்கிறார்கள். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் சாம்பலாகி தான் போயிருக்கிறார்கள். மாநில கட்சியை ஒழிக்க வேண்டும் என்று கோவாவில் பேசுகிறார். இது குடும்ப ஆட்சி. குடும்ப கட்சி தான். என்னை தொடர்ந்து, என் வாரிசு கூட இருவண்ண கொடியை உயர்த்தி புடிக்கும். குடும்பத்தை விட்டு வெளியே வந்தோம் என்று நீங்கள் பேசினால் தமிழ்நாட்டு மக்கள் உங்கள் பின்னாடி வரமாட்டார்கள். தமிழில் பேசினாலும், திருக்குறளை பேசினாலும் மக்கள் மோடி பக்கம் வர மாட்டார்கள். கடந்த நாாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் தேனியில் மட்டும் தான் தாமரை மலர்ந்தது. ஆம்... தேனி மட்டும் தான் தாமரையை தேடி பறந்தது.

இது இயற்கை. தலைவர் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சொன்னார்கள். முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கர்ஜித்து ஆட்சி அமைத்தார். கலைஞரை விட ஸ்டாலின் வலிமையானவர் ஸ்டாலின் என்று நாளிதழ்கள் குறிப்பிட்டது. மோடி தமிழகம் 4 முறை வருகிறார்.

தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதியை தர மறுத்த மோடி ஏன் ஓட்டுக்காக திரும்ப திரும்ப வருகிறார். எங்களுக்கு ராமரையும் தெரியும், இராமசாமியையும் தெரியும். 5000 கோடி மதிப்புடைய சொத்துகளை மீண்டும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொடுத்தது தலைமைதான். தமிழ்நாட்டில் நீங்கள் அயோத்தி அரசியல் செய்ய முடியாது. நிர்மலா சீதாராமன் ஏன் அயோத்தி போகாமல் காஞ்சிபுரம் வருகிறார்.

திமுகவை விமர்சிக்க தான் வருகிறார். இது ஆன்மீக பற்று இல்லை அரசியல். இதை மக்கள் உணர்வார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 10 ஆண்டுகால வேதனையையும், சோதனையையும் பாருங்கள். தளபதி அடையாள படுத்துகிறவர். நாளைய பிரதமர் ஆவார். அதற்கு மக்கள் இல்லந்தோறும் ஸ்டாலினை ஆதரியுங்கள். வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

விழிக்க வேண்டிய கூட்டம் தான் இது. நாங்கள் அத்தனைபேரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய கூட்டம் இது. கடந்த காலங்களில் ஆட்சி செய்தவரை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் வந்து இறங்கிய உடன் எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்கள் தான் நினைவுக்கு வருகிறதாம்.

மோடியா அல்லது லேடியா என்று சொன்னார் ஜெயலலிதா. சொத்துக்குவிப்பு வழக்கை போட்டவர், தண்டனை வாங்கி தந்தவர், அவர் தான் மோடி. இவர் ஓட்டுக்காக இப்படி பேசுகிறார். மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டது, இடியாப்பம் சாப்பிட்டது, அம்மையார் அல்ல. சின்னம்மா தான். அப்போலோ மருத்துவமனையில் 1.4 கோடி கேண்டின் கடன் இருப்பதாக நிறுவனர் பிரதாப் ரெட்டி சொன்னார்.

ஆட்டிற்கு தாடி அவசியம் இல்லை. அதுபோல நாட்டிற்கு ஆளுநர் தேவை இல்லை. இது தான் அண்ணாவின் முறை. சட்டமன்றத்தில் தேசியகீதம் பாட சொல்கிறார் ஆளுநர். திரையரங்கில் செய்யவேண்டியது தலைமை செயலகத்தில் செய்ய சொல்கிறார். அவரை நீக்க தனி தீர்மானம் போட வேண்டும். இதில் என்ன தவறு. ஆளுநர் சட்டசபையில் உரையை படிக்க வேண்டும். இதுதான் முறை. பல மாநிலங்களில் பாஜக தோல்வியை சந்தித்து வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பெறுவோம் என்று தமிழ்நாட்டில் வந்து சொல்கிறார்கள்.

எப்படி தமிழ்நாடு மக்கள் நம்புவார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையில் அடிக்கல் நாட்டு விழா செய்ததை தவிர மற்ற வேலைகள் எதுவும் செய்யவில்லை. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும்போது மற்ற மாநில நிதியை எடுத்து தருவார்களாம். ஆனால் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பானில் நிதி தந்தால் தான் கட்ட முடியும் என்று சொல்கிறார்கள்.

சாகும் தருவாயில் பாஜக எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த கட்டப்பணிகள் தொடக்கம் என்று தொலைகாட்சியில் அறிவிப்பு வெளியிடுகிறார்கள். மிசா சட்டத்தை திருமணமான 24 நாளில் பார்த்தவர் அவரை தமிழ்நாட்டில் ஒன்றும் செய்யமுடியாது என பேசினார்.

Tags:    

Similar News