பொங்கலுக்கு 1.75 கோடி பேருக்கு இலவச வேட்டி -–சேலை! - அமைச்சர் ஆர்.காந்தி
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டிற்கான கரும்பு அரவை தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்து கொண்டு கரும்பு அரவையை தொடங்கி வைத்தார். சர்க்கரை ஆலை செயலாட்சியர் நர்மதா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் கரும்பு வெட்டும் இயந்திரம் 2023 .24 ஆண்டு அரவை பருவத்தில் அதிக அளவு கரும்பு சப்ளை செய்த 24 விவசாயிகளுக்கு பரிசுத்தொகையை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை யில் வழங்கப்பட்டது.
பிறகு அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.
தமிழக அரசு வேளாண்மை, கல்வி ,சுகாதாரம் ஆகிய மூன்று துறைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறது. வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ஏழை -எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி -– சேலை இந்த ஆண்டு இறுதிக்குள் 90 சதவீதம் பேருக்கும், ஜனவரி மாதம் 10ந்தேதிக்குள் நூறு சதவீதம் என ஒரு கோடியே 75 லட்சம் பேருக்கு வழங்கப்படும் .
15 வண்ணங்களில் சேலைகளும் ஐந்து வண்ணங்களில் வேட்டிகளும் தரமானவையாகவழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
துணி ரகங்கள் வெளி நாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதாக கூறப்படுவது தவறு. நூலுக்கு மட்டும்தான் டெண்டர் விடப்படுகிறது. ஆனால் அதை தயாரிப்பது கூட்டுறவு சங்கங்கள் தான் கடந்த ஆண்டு துணிரகங்களில் பாலிஸ்டரை கலப்பதாக தவறான தகவல் தெரிவித்து இருந்தனர் .
அதற்காக மொத்தமும் பாலிஸ்டர் கலந்திருக்கிறது என கூறுவது தவறாகும். இதனை தடுக்கும் விதமாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம் .
துணி நூல் துறையை பொறுத்தவரை யார் தவறு செய்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
நூல் விலையை தீர்மானிப்பது தமிழக அரசு இல்லை .காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கட்டுப்பாட்டில் தான் நூல் விலை உள்ளது.
சைமா எனப்படும் சவுத் இந்தியா மில் அசோசியேசன் கோரிக்கையை ஏற்று செஸ் வரியை நீக்கினோம், மில்களுக்கு மானியம் அளித்தோம், இதனால் துணியை நூல் உரிமையாளர்கள் தமிழக முதலமைச் சரை சந்திக்க உள்ளனர் மில்களில் எந்திரங்கள் புதுப் பிக்க எட்டு சதவீதம் வட்டி வங்கிகளுக்கு கட்டினால் ஆறு சதவீதம்அரசு அளிக்கிறது. நிதிநிலை எப்படி இருந்தாலும் அதனை சரியாக கையாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளுக்காகவும் சிந் தித்து செயல்படுத்துகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாநகர செயலாளர் ப. கார்த்திகேயன் எம்.எல்.ஏ., இராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜே.எல். ஈஸ்வரப்பன் எம் .எல் .ஏ, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் , துணைத்தலைவர் சரவணன், ஒன்றிய கழக செயலாளர் தணிகாசலம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் கிழக்கு மாவட்டம், புவனகிரி ஒன்றியம், சேத்தியாத்தோப்பு – புவனகிரி மெயின் ரோட்டில் மிராளூர் கிளைக் கழகச் செயலாளர் ஜி .சேதுராமன் பிள்ளை எம் .ஜி .எஸ். பெட்ரோல் பங்க் நிலையத்தை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்து,வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகித்து துவக்கிவைத்தார். இந்த நிகழ்வில் மாவட்டக் கழகப் பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ,துரை.கி.சரவணன், புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ். மதியழகன், கம்மாபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஆர்.ராயர், சேத்தியாதோப்பு பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் பழனி.மனோகரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம். மதியழகன் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் எஸ் .கே. கருணாநிதி, மாவட்டக் கழக பிரதிநிதி துரை மணிராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஜெகன், எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தொ.மு.ச தலைவர் க.இராஜாராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாரங்கபாணி, மோகன், உள்ளிட்ட, மாவட்ட ஒன்றிய நகர பேரழக நிர்வாகிகள் சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.