ஊத்தங்கரையில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஊத்தங்கரையில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2024-12-02 09:24 GMT

Edapadi palanisamy
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது. ஊத்தங்கரை அண்ணாநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும். அதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.