கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்

கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் பாதையை வழிமறித்து தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை கண்டித்து இந்து மக்கள் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2024-04-07 07:35 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்


மதுரை அருள்மிகு கூடழகர் பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் மற்றும் தோசங்களை கழிப்பதற்க்கு எல் விளக்கு,அகல்விளக்கு நெய்விளக்கு ஏற்றி வருவார்கள். இக்கோவிலில் பெருமாள்,அனுமன், நவகிரகங்கள்,

சனிஸ்வரபகவான் போன்ற தெய்வங்களுக்கு தோசங்களை கழிப்பதற்க்கு இந்துக்கள் நம்பிக்கை வைத்துள்ள மிகச் சிறப்பு வாய்ந்த புகழ்பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் சனிக்கிழமை அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்து செல்வார்கள்.இந்த சூழ்நிலையில் மிகவும் விஷேசமான சனிபிரதோசமான நாளான இன்று (6-4-2024) மாலையில் கூடழகர் பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் பாதையை வழிமறித்தும்,கூடழகர் பெருமாள் கோவில் தேரை மறைத்தும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லாத வகையில் போக்குவரத்திற்க்கும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில்,

  மதுரை பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து மேடை அமைத்து தேர்தல் பிரச்சார பொது கூட்டம் நடத்தியதை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத வழிபாட்டு தலங்களுக்கு முன்பாக தேர்தல் பிரச்சார எந்த ஒரு கூட்டமும் நடைபெறக் கூடாதென்று தேர்தல் ஆணையம் உத்தரவு விதிகளை மீறி கோவில் அருகே கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்க்கு தேர்தல் ஆணையமும் காவல்துறையும் எதன் அடிப்படையில் அனுமதி அளித்தது? இதுபோன்று முக்கிய நாளான வெள்ளி அன்று பள்ளிவாசலுக்கு செல்லும் பாதையையும்,ஞாயிற்றுகிழமை அன்று சர்ச்சுக்கு செல்லும் பாதையும் வழி மறித்து மேடை அமைத்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த வேற கட்சி வேட்பாளர்களுக்கும் அனுமதி அளிக்குமா இந்த தேர்தல் ஆணையமும் காவல்துறையும். மதுரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சு.வெங்கடேசன் அவர்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையும், மதுரை மீனாட்சி அம்மனையும் இழிவாக பேசியவர்.

இந்துமத தெய்வங்களான ஐயப்பனையும், கண்ணணையும், ஆதிபராசக்தியையும் அசிங்கப்படுத்தியும், இந்து மத நம்பிக்கைகளை கேவலபடுத்தி கோசங்கள் எழுப்பிய மக்கள் அதிகார அமைப்பு கடந்த வருடம் மதுரையில் நடத்திய கருஞ்சட்டை பேரணியை துவக்கி வைத்தவரும் இந்த சு.வெங்கடேசன். புதிய பாராளுமன்றத்தில் தமிழக சைவ ஆதினங்களின் செங்கோலை வைத்ததற்க்கும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்க்கும் சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இப்படி இந்து மதத்திற்க்கும் இந்துசமய நம்பிக்கைகளுக்கும் மட்டும் எதிராக செயல்படும் சு.வெங்கடேசன் அவர்கள் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் மதுரையில் போட்டியிடுகிறார். சனி பிரதோசம் இந்துக்களுக்கு முக்கியமான நாள் என்று தெரிந்திருந்தும் வேண்டுமென்றே திட்டமிட்டு கூடழகர் பெருமாள் கோவிலுக்கு முன்பாக தேர்தல் பிரச்சார கூட்டம் சு.வெங்கடேசன் நடத்தி உள்ளார் என்றே சந்தேகம் எழுகிறது. எனவே முக்கிய நாளான சனிபிரதோசத்தன்று மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்லும் வழிபாதையை மறித்தும்,

கூடழகர் பெருமாள் கோவில் தேரரையும் மறைத்தும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லாத வகையில் பக்தர்களுக்கும்,போக்குவரத்திற்க்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், தேர்தல் ஆணையத்தின் விதிமீறலுக்கு எதிராகவும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்திய மதுரை பாராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மீதும்,

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்க்கும்,மதுரை காவல்துறைக்கும் இதன் மூலம் புகார் மனுவை இந்துமக்கள்கட்சி சார்பில் சமர்பிக்கப்பட்டது

Tags:    

Similar News