காங்கேயத்தில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

காங்கேயத்தில் நகர அதிமுக  நிர்வாகிகள் சார்பில் காங்கேயம்  நகராட்சி  அலுவலகம் முன்பு மனித சங்கிலி  போராட்டம் நடைபெற்றது. 

Update: 2024-03-12 13:02 GMT

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

மக்கள் விரோத திமுக அரசை கண்டித்தும், பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும், போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே போதை பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுபடுத்த வேண்டும் எனவும்,

அதிமுக நிர்வாகிகள் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றதை அடுத்து காங்கேயத்திலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மேலும் போதை பொருட்களினால் ஏற்பட கூடிய ஆபத்துகளில் பாலியல் வன்கொடுமையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பெண் கற்பழிப்பு, புதுச்சேரி சிறுமி பாலியல் மற்றும் கொடூர கொலையை அடுத்து காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் பகுதியிலும் நடந்த சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமையை செய்த அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வன்மையாக கண்டித்தும்,

இந்த போராட்டத்தை ஆளுங்கட்சி திமுகவை எதிர்த்து மிகப்பெரிய அளவில் நடத்தினர். காங்கேயம் பேருந்து நிலையம் முதல் காங்கேயம் காவல் நிலைய ரவுண்டானா வரையிலும் சுமார் 500 பேருக்கும் மேலாக கைகளை கோர்த்துக் கொண்டும், கோசங்களை எழுப்பியும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.    மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே. கிஷோர்குமார், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், குண்டடம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி. சண்முகசுந்தரம்,

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்கள் கந்தசாமி மற்றும் துரைசாமி , மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் பாலகிருஷ்ணன்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் அப்பு @ பழனிச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் செல்வகுமார் உட்பட நகர ,ஒன்றிய பொறுப்பாளர்கள்,சார்பு அமைப்பு நிர்வாகிகள் கிளைக்கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News