நாங்கள் புஜ்யம் என்றால், எங்களுக்கு ஏன் பதில் சொல்கிறார்கள் - வானதி

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பூஜ்ஜியம் என்றால் சட்டமன்றத்தில் எதற்காக எங்களது கேள்விக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் திராவிட முன்னேற்றக் கழக அரசியல் என்பது பாரதிய ஜனதா கட்சியை வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சி அரசியல் என்பது பாஜகவை எதிர்ப்பதற்காகத்தான். பிஜேபி இல்லை என்றால் அரசியல் இல்லை என்று திமுகவினர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2024-01-28 04:24 GMT

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சார்பில் நடத்தும் மாபெரும் பெண்கள் மாநாடு நடைப்பெற்றது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.கோவை,பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நீலகிரி,அவிநாசி, சூலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்து பெண்கள் பங்குபெற்றுள்ளனர்.இதில் பேச்சாளர்கள் பாரதி பாஸ்கரன்,வாசுகி மனோகரன்,சத்தீஸ்கர் மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரி சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கடந்த ஜனவரி 19ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.கேலோ இந்தியா என்ற நிகழ்வு ஒரு தேசிய அளவிலான நிகழ்வு மத்தியில் விளையாட்டு துறை அமைச்சகம் பெருமளவு நிதி உதவி செய்துள்ளனர். பிரதமர் தான் இதை துவக்கி வைத்திருக்கிறார்.இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் கோவை,திருச்சி,மதுரை போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது. கோவையிலே இந்த போட்டிகள் நடந்து கொண்டிருப்பதற்காக பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன ஆனால் எதிலுமே பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை.

இதுவே சென்னை விமான நிலையத்தில் மத்திய அரசாங்கத்தின் சார்பில் விளம்பர பேனர்களில் இந்த மாநில முதல்வர் புகைப்படத்தை மத்திய அரசு வைத்துள்ளது.இது முதல் முறை அல்ல எனவும் இதற்கு முன்பாக கூட செஸ் ஒலிம்பியா நடக்கும் பொழுதும் இது போன்ற பிரச்சனை செய்ததாகவும் பிரதமரின் புகைப்படத்தை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் எப்படி மத்திய அரசாங்கத்தின் அனுமதியோடு ஒத்துழைப்போடு நடத்துகின்றனர்.தாத்தா தந்தை மகன் என மூன்று பேரும் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்சியே குடும்ப கட்சி,அரசாங்கத்தையும் குடும்ப அரசாக எண்ணுகிறதா? என கேள்வி எழுப்பியவர் இந்த அரசு விளம்பர அரசாங்கத்தை போல் சுயநலத்திற்காக செயல்படும் அரசாக இருப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார்.

கோவையில் வைத்திருக்க கூடிய அனைத்து பேனர்களிலும் உடனடியாக பிரதமர் படத்தை வைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அப்படி எங்கள் கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்தால் மாவட்டத்தின் தலைவர் தலைமையில் எங்கள் கட்சியினர் ஒவ்வொரு விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஓட்டுவார்கள் என்றவர் நாங்கள் கேட்பது சட்ட ரீதியாக நிர்வாக ரீதியாக நியாயப்பூர்வமான ஒரு கோரிக்கை எனவும் இதை தமிழக அரசு ஏற்கும் என நம்புவதாக கூறியவர் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்றார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பூஜ்ஜியம் என்றால் சட்டமன்றத்தில் எதற்காக எங்களது கேள்விக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள் எனவும் ஒவ்வொரு நாளும் திராவிட முன்னேற்றக் கழக அரசியல் என்பது பாரதிய ஜனதா கட்சியை வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறது எனவும் தமிழகத்தில் ஆளும் கட்சி அரசியல் என்பது பாஜகவை எதிர்ப்பதற்காகத்தான் என்றவர் பிஜேபி இல்லை என்றால் அரசியல் இல்லை என்று அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார். திருமாவளவன் அவர்கள் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொன்னால் அரசியலமைப்பு சட்டத்தின் படி இட ஒதுக்கீடு என்பது நீங்கள் பேசும் மக்களின் உரிமைகள் இல்லாமல் போகும் இதை புரிந்து கொண்டு தான் பேசுகிறாரா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியவர் ஒன்றே தெரிந்து கொள்ள வேண்டும் ஜாதியை பாகுபாட்டிற்கு நாங்கள் ஆதரவாளர்கள் அல்ல எனவும் தீண்டாமையை முழு மூச்சாக எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கம் எனவும் ஆர்எஸ்எஸ் இயக்கம். அதன் குடும்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை இயக்கங்களும் தீண்டாமைக்கு எதிராக போதுமான நடவடிக்கை செய்து வருகிறோம் என்றார். இந்தியா கூட்டணி புள்ளி வைத்த கூட்டணி என்றும் உருவாகும் போது இது நிலைக்காது என கூறினோம். இவர்களுக்கு பொதுவான குறிக்கோள் எதுவும் இல்லை எனவும் அவர்களுக்கான செயல் திட்டம் இல்லை ஏனென்றால் புள்ளிக் கூட்டணி உருவானது குடும்ப அரசியலை காப்பாற்றுவதற்காக அவர்களுக்கு மக்கள் நலன் என்பது பிரதானமாக இருந்ததில்லை என தெரிவித்தார். விஜய் கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் எனவும் கட்சி ஆரம்பித்த பிறகு மக்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து அதன் பிறகு எங்களது கருத்துக்களை சொல்வோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News