கானம்டவுன் பஞ்சாயத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு

கானம் டவுன் பஞ்சாயத்தில் துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

Update: 2024-03-05 12:26 GMT

திறப்பு விழா 

தூத்துக்குடி மாவட்டம், கானம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட கீழக்கானத்தில் தமிழக அரசின் மருத்தவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஸ்வரி ராமஜெயம் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் அந்தோணி காட்வின் முன்னிலை வகித்தனர்.  சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அம்பிகாபதி திருமலை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கிகேற்றி கட்டிடத்தை பார்வையிட்டார்.

இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வக்குமார், ஆனந்தராஜ், கானம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் பால்ராஜ், கானம் நகர திமுக செயலாளர் ராமஜெயம், திமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News