பொன்முடியை போல் 3 அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து - கலக்கத்தில் திமுக
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன் வந்து முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவித்தது தமிழக அரசியல் புள்ளிக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன் வந்து முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவித்தது தமிழக அரசியல் புள்ளிக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதிமுக, திமுக என மாறி, மாறி ஆட்சி அமைக்கும் அரசியல் தலைவர்கள் தங்களிடம் பதவி இருந்த போது சொத்துக்களை வாரி குவித்தனர்.
அதன் மீதான வழக்குகளும், விசாரணைகளும் உள்ளூர் நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை உள்ளன. சில வழக்குகள் அவசர கதியில் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த ஒரு வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு அதற்கான தண்டனை கிடைத்ததா என்று கேட்டால் விரல் விட்டு கூட எண்ண முடியாது.
இந்த நிலையில், அதிமுக மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் குற்றங்களை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வந்திருப்பது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கலக்கத்தை தரலாம். ஆனால், ஆறு முக்கிய முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்து தெரிந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இவர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டில் பலிகடாவானது பொதுமக்களின் நம்பிக்கையும், அவர்கள் அளித்த வாக்குகளுமே.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டதாக கூறப்பட்ட 6 அரசியல் தலைவர்கள் ஓ. பன்னீர்செல்வம், பி.வளர்மதி, கே. பொன்முடி, கேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியசாம்மி. இவர்கள் அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலங்களில் வருமானத்துக்கு அதிகமாகவும், ஊழல் செய்தும் சொத்து குவித்ததாக வழக்குகள் பதியப்பட்டு நீர்த்து இருந்தன.
ஆனால், இந்த வழக்குகளை தூசித்தட்டி எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரணையை தொடங்கினார். இது அரசியல் வட்டாரத்தில் பீதியை கிளப்பிய நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை மாற்றப்பட்டார். இதனால், குற்றச்சாட்டில் சிக்கி இருந்த பெரும்புள்ளிகள் பெருமூச்சு விட்டனர்.இந்த சூழலில், மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மாற்றப்பட்டுள்ளார்.
இதனால் தாமாக வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்குகளை மீண்டும் விசாரிக்கிறார் ஆனந்த் வெங்கடேசன். இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி மீதான விசாரணை நடைபெற உள்ளதால் ஊழல் குற்றச்சாட்டில் யாருடைய பதவி பறிபோகும் என்ற கலக்கத்தில் அரசியல் தலைவர்கள் உள்ளனர்.
அண்மையில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.