6 நட்களாக பிரச்சாரத்துக்கு போகாத மோடி - உளவு துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்
வெற்றி வாய்ப்பு இருந்த வடமாநிலங்களில் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை, அடிப்படை பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் சாமானிய மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பிரதமர் மோடி 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாமல் இருப்பதற்கு உளவுத்துறை தந்த அதிர்ச்சி ரிப்போர்ட் தான் காரணம் என கூறப்படுகிறது. பிரதமரையே முடக்கி போடும் அளவுக்கு உளவுத்துறை அப்படி என்ன கூறியது என்பதை விரிவாக பார்ப்போம்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 19ம் தேதி தேர்தல் தொடங்குகிறது. ஏற்கெனவே இருமுறை ஆட்சியை பிடித்த பாஜக இந்த முறையும் வெற்றிப்பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் அறிவிப்பு தொடங்கியதில் இருந்து தென்னிந்தியாவை டார்கெட் செய்த பிரதமர் மோடி அடிகடி தமிழ்நாட்டிற்கு வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது கடுமையாக திமுகவையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் விமர்சித்த பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரை புகழ்ந்து பேசினார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை வாரிசு அரசியல் என விமர்சித்த பிரதமர் மோடி, கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்து பிரச்சாரம் செய்தார்.
ஆனால் கடந்த 6 நாட்களாக பிரதமர் மோடி எங்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. 3வதுமுறையாக ஆட்சி அமைக்க விரும்பும் பிரதமர்மோடி ஏன் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு உளவுத்துறை ரிப்போர்ட் தான் காரணம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதாவது தேர்தல் தேதி அறிவிகப்படுவதற்கு முன்னதாக எலக்ஷன் சர்வே எடுக்கபப்ட்டுள்ளது. அதில், தென் மாநிலங்களில் பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும், ஆனால் வடமாநிலங்களில் பாஜகவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.
தென் மாநிலங்களின் பலம் இல்லாவிட்டாலும் வடமாநிலங்களை வைத்து அடுத்த முறை ஆட்சி அமைக்கலாம் என்ற சந்தோஷத்தில் பிரதமர் மோடி இருந்தார். இதற்கு பேரிடியாய் வந்தது உச்சநீதிமன்றத்தின் தேர்தல் பத்திர தீர்ப்பு விவகாரம். தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம் அதன் விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. அதன்படி எஸ்பிஐ வங்கி வெளியிட்ட தகவலில் அதிகமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை பெற்றது பாஜக கட்சி தான் என தெரிய வந்தது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால் பாஜகவுக்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
ஏற்கெனவே வெற்றி வாய்ப்பு இருந்த வடமாநிலங்களில் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை, அடிப்படை பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் சாமானிய மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதற்கு இன்னொரு வாய்ப்பாக தேர்தல் பத்திர தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்கெனவே வெற்றி வாய்ப்பு இருந்த வடமாநிலங்களிலும் பாஜகவின் பலம் குறைந்து உள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க கடந்த தேர்தல்களில் பிரதமர் மோடி கொண்டு வந்த கருப்பு பணம் ஒழிப்பு, பணமதிப்பிழப்பு போன்றவைகள் மக்களுக்கு உதவ இல்லை, அது கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே உதவியது என உச்சநீதிமன்றம் மத்திய அரசான பாஜகவுக்கு குட்டு வைத்தது. இதுவும் பிரதமர் மோடியின் மேஜிக்கை டேமேஜ் செய்துள்ளது.
இதனால் பிரதமர் மோடி கடந்த 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாமல் தீவிர ஆலோசனையில் உள்ளாராம். கடந்த தேர்தல்களில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என வசீகர வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடி இந்த தேர்தலில் பெரிதாக எதையும் பேசவில்லை. சிஏஏ சட்டம், நீட் தேர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு என மக்களை திண்டாட்டத்தில் விட்ட பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு சாமானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பாஜகவுக்கு வாய்ப்பு குறைவு என உளவு துறை கூறியுள்ளது. உளவு துறையின் இந்த கணிப்பு எந்த அளவுக்கு பலிக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் கூறும்.