இரவோடு இரவாக மன்சூர் அலிகானுக்கு வந்த அதிர்ச்சி- நடந்தது என்ன ..?

”கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்காமல் அவராகவே தானாக முடிவு எடுத்து செயல்படுகிறார். அவர் இரவில் ஒருபேச்சு, விடிந்தால் ஒரு பேச்சு என செயல்படுகிறார்”

Update: 2024-03-16 04:53 GMT

மன்சூர் அலிகான் கட்சியில் இருந்து நீக்கம்

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இரவோடு, இரவாக மன்சூர் அலிகான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவதாக மன்சூர் அலிகான் அறிவித்திருந்த நிலையில் இரவோடு, இரவாக அவர் நீக்கம் செய்ய காரணம் என்ன என்பதையும், அடுத்த தலைவர் யார் என்பதையும் விரிவாக பார்ப்போம்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளன. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைந்துள்ளது. இந்த வரிசையில் தமிழக பிரபலம் ஒருவர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் இரவோடு இரவாக நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். அண்மையில் மன்சூர் அலிகான், தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி என மாற்றினார். இந்த முதல் மாநாடு கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ராமநாதபுரம் கீழக்கரையில் நடைபெற்றது. அதன்பின்னர், தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என அறிவித்தார்.

தொடர்ந்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், அதிமுக கூட்டணியில் மன்சூர் அலிகான் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் மன்சூர் அலிகான் டிவிஸ்ட் கொடுத்தார். அதாவது அதிமுகவின் அழைப்பின் பேரில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்கு சென்றதாக கூறிய மன்சூர் அலிகான், அதில் உடன்பாடு எட்டாததால் அதிமுகவில் சேரவில்லை என்றார்.

இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்து மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் நடந்த அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் மன்சூர் அலிகான் நீக்கம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுளது. அதில், கட்சியின் தலைவருக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும், பொதுச்செயலாளாரான கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் முடிவு குறித்து இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரான கண்ணதாசன் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தலைவரை நீக்க முடிவெடுத்துள்ளோம். கட்சியின் தலைவருக்கு இருந்த அதிகாரம் அனைத்தும் பொதுச்செயலாளாருக்கு வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்சூர் அலிகான் தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிது புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார். ஆனால், சில நாட்களில் அது காணாமல் போகிறது. இந்திய ஜனநாயகக் கட்சி தேர்தலுக்கு பிறகும் இருக்க வேண்டும் என நினைத்து நாங்கள் செயல்படுகிறோம். ஆனால், மன்சூர் அலிகான் அவராக முடிவு எடுத்துக் கொள்கிறார்.

கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்காமல் அவராகவே தானாக முடிவு எடுத்து செயல்படுகிறார். அவர் இரவில் ஒருபேச்சு, விடிந்தால் ஒரு பேச்சு என செயல்படுகிறார். இதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது என்பதால் அவரை நீக்கியுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய தலைவரை தேர்வு செய்யலாமா, அல்லது பொதுச்செயலாளர் தலைமையில் இயங்கலாமா என்பது குறித்து பிறகு முடிவெடுப்போம்” என்றார்.

அண்மையில் லியோ படத்தில் நடித்த த்ரிஷா குறித்து பேசிய மன்சூர் அலிகான், சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது வழக்கு தொடர்ப்பட்ட நிலையில் நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது. இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் மன்சூர் அலிகானை கட்சியில் வைத்திருந்தால், கட்சி அடையாளம் தெரியாத நிலையில் மாறிடும் என்ற அச்சத்தில் அவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

Similar News