மயிலாடுதுறை பாமக வேட்பாளர் கேரள செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம க ஸ்டாலினுக்கு, கேரள செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ம க ஸ்டாலின் போட்டியிடுகிறார் இன்று இவர், கும்பகோணம் அருகேயுள்ள கருப்பூர் சுந்தரமா காளியம்மன் (எ) பெட்டி காளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து இன்றைய பிரச்சார பயணத்தை கும்பகோணம் மேற்கு வடக்கு ஒன்றியத்தில் இருசக்கர வாகனங்களில் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் புடைசூழ பாஜக, தமாகா, அமமுக,
பாமகவினருடன் தொடங்கி கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கருப்பூரில் பிரச்சாரம் தொடங்கி, மணஞ்சேரி, கோவிலாச்சேரி, கல்லூர், களம்பரம், பாதிராக்குடி வழியாக சோழபுரம் கடைவீதி பகுதிக்கு வருகை தந்த போது, அவருக்கு கேரள ஜெண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களிடம், 3வது முறையாக மோடி பிரதமராக முடிசூட, தனக்கு மாம்பழ சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை தந்தார்.
அதாவது, பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் வசதிக்காக, அணைக்கரை மற்றும் சோழபுரம் பகுதியில் இருந்து கும்பகோணத்திற்கு பள்ளி கல்லூரி நேரத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கவும், இத்தொகுதியில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்கவும், மழை வெள்ள காலங்களில் வீணாகும் வெள்ள நீரை பயன்படுத்திடும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 3 கி.மீ தூரத்திற்கு ஒரு தடைப்பணை அமைக்கவும்,
திருச்சியில் இருந்து டெல்லிக்கு கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக புதிதாக செங்கோல் விரைவு ரயில் கொண்டு வர முயற்சிப்பேன் என்றும் இத்தொகுதியில் தொழில் வளம் பெறுகவும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் வாக்குறுதி தந்து
மாம்பழ சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார் என்பது குறிப்பிடதக்கது அவருடன் கூட்டணி கட்சியினரான பாஜக, தமாகா, அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது