மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை

Update: 2023-10-29 10:11 GMT

சமத்துவ மக்கள் கட்சி கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குலசேகரத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் குமரி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் அமலன், குமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கால்டுவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர.

மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். காலை, மாலை பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்லும் நேரங்களில் கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக டாரஸ் லாரிகள் செல்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்லும் நேரங்களில் கனிமவளங்கள் கொண்டு செல்லும் வாக னங்களுக்கு தடைவிதிக்க வேண்டும். குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் இதுவரை பலர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும். கல்லூரியில் போலி இருப்பிட சான்றுகளுடன் படிக்கும் வெளிமாநிலத்தவர் குறித்து விசாரணை நடத்த வேண்டும். கல்லூரி நிர்வா கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலை களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகளை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்க ளில் கொண்டுவந்து கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags:    

Similar News