அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!!
உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2025-02-17 08:29 GMT
Duraimurugan
தமிழக அமைச்சர்களில் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மூத்தவரான அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் துரைமுருகனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.