கேமராக்கள் சூழ செய்வது தான் தியானமா ? - அமைச்சர் மனோ தங்கராஜ்

பிரதமர் மோடி தியானத்துக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார். டிவி கேமராக்களை வைத்துக்கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி தியானம் இருக்கிறார். மேற்கு வங்க மக்களின் உணர்வுகளை கவர்வதற்காக நடந்த திட்டமிட்ட வேலைதான் இந்த தியானம் என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டினார்.

Update: 2024-06-02 05:29 GMT

அமைச்சர் மனோ தங்கராஜ் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி நினைவு தினத்தை ஒட்டி நேற்று அங்குள்ள நேசமணி சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அமைதியாக இருப்பதுதான் தியானம் என்று சித்தர்கள், ஆன்மீக தலைவர்கள் கூறியுள்ளனர். பிரதமர் மோடி தியானத்துக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார். டிவி கேமராக்களை வைத்துக்கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி தியானம் இருக்கிறார். 

இந்த மாதத்தில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு  அதிகமாக வருவார்கள். பெரிய நெருக்கடியை கொடுத்த இந்த தியானத்தை நாங்கள் மட்டுமல்ல முதல் முறையாக உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.  பிரதமருக்கு டெல்லி இல்லம் தான் மிகப்பெரிய இடம். அங்கு தியான இருந்திருக்கலாம். ஆனால் இத்தனை பொது நெருக்கடியான இடத்தில் தியானம்  இருக்கிறார் என்றால் இதில் அரசியலைத் தவிர வேறு எதுவும் இல்லை.  சுவாமி விவேகானந்தர் பிறந்த ஊரான மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு நடந்த சூழலில் அங்குள்ள மக்களின் உணர்வுகளை கவர்வதற்காக நடந்த திட்டமிட்ட வேலைதான் இந்த தியானம். என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Tags:    

Similar News