2026 தேர்தல் திமுக வெற்றி குறித்து அதிமேதாவிகளாக தற்குறிகளாக சிலர் விமர்சனம்: அமைச்சர் சேகர்பாபு
2026 தேர்தல் திமுக வெற்றி குறித்து அதிமேதாவிகளாக தற்குறிகளாக சிலர் விமர்சனம் செய்வதாக அமைச்சர் சேகர்பாபு சாடியுள்ளார்.
By : King 24x7 Desk
Update: 2024-12-07 06:24 GMT
சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே 'மைனஸ்' ஆக்கிவிடுவார்கள் என்று கூறி இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் உள்ள 10 கருணை இல்லங்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 200 தொகுதிகளில் வெல்வோம் என சொன்னதற்கு களத்திற்கே வராதவர்கள் விமர்சிக்கின்றனர். வரும் 2026-ல் எங்கள் இலக்கு 200 தொகுதிகள் அல்ல; 234 தொகுதிகள். 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். 2026 தேர்தல் திமுக வெற்றி குறித்து அதிமேதாவிகளாக தற்குறிகளாக சிலர் விமர்சனம் செய்கின்றனர் என்று அவர் கூறினார்.