திருப்பத்தூர் அருகே பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்த எம்பி

திருப்பத்தூரில் மக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற் கூடத்தை எம்பி திறந்து வைத்தார்.

Update: 2024-03-05 12:40 GMT
எம்பி திறப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியில் 15 லட்சம் மதிப்பிலான பயணிகள் நிழற்கூடம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் பயனியர் நிழற்கூடம் இல்லாமல் இருந்து வந்தது.

இது குறித்து நிழற் கூடம் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் அதன் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பில் பிரம்மாண்ட பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன். அண்ணாதுரை ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் திருப்பத்தூர் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன், டி ரகுநாத். ஸ்ரீதர் திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேஷ் மாவட்ட விளையாட்டு அமைப்பாளர் வெங்கடேசன். நாலாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கௌரி ஐயப்பன் . மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிரிராஜ். நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா.

நகர மன்ற உறுப்பினர் குட்டிமணி. நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன். முன்னாள் சேர்மன் அரசு.கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News