நாடாளுமன்றத்தை அலறவிடும் எம்பிக்கள் ! கேள்வியும் - பதிலும் !

Update: 2024-12-06 08:57 GMT

நாடாளுமன்றம் 

தமிழ்நாட்டின் உரிமைகள் – நலன்களுக்காக

நாடாளுமன்றத்தில் நாள்தோறும் குரல் எழுப்பும் எம்.பி.க்கள்!

தொடர் கேள்விக் கணைகளால் திணறும் ஒன்றிய அரசு!

இர­யில்­வே­து­றையை கைக­ழு­வும் ஒன்­றிய அரசு?




கனி­மொழி கரு­ணா­நிதி:

வழக்­கம்­போல ஒன்­றிய அரசு அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் தனது கையில் எடுத்­துக்­கொண்டு, நாடா­ளு­மன்­றத்­தில் மற்­ற­வர்­கள் என்ன செய்­ய­வேண்­டும் என கட்­ட­ளை­யி­டு­வ­தை­போ­லவே இர­யில்வே திருத்த மசோதா 2024 விச­யத்­தி­லும் நடந்­து­கொள்­கி­றது.

நாட்­டி­லுள்ள மற்ற அனைத்து இர­யில்­வே­க­ளை­விட தெற்கு இர­யில்வே மண்­ட­லத்­திற்கு உட்­பட்ட இர­யில்­க­ளின் தரம் மிக மோச­மா­ன­தாக இருக்­கின்­றது. உணவு மற்­றும் கழிப்­பறை வச­தி­க­ளின் தரம்­கூட மிக மோச­மா­ன­தாக இருக்­கின்­றன. இதை சுட்­டிக்­காட்­டும்­போது ஒன்­றிய அரசு இர­யில்­வே­துறை தனி­யார்­ம­ய­மாக்­கலை முன்­மொ­ழி­கி­றது.

இப்­படி இர­யில்­வே­து­றையை ஒன்­றிய அரசு கைக­ழு­வு­வது சரி­யல்ல. நாட்­டின் பெரும்­பான்­மை­யான அடித்­தட்டு மக்­கள் இன்­றும் தங்­க­ளின் முதன்மை போக்­கு­வ­ரத்­தாக இர­யில்­க­ளையே நம்பி இருக்­கின்­ற­னர். அதை கருத்­தில்­கொண்டு இர­யில்­வே­துறை தனி­யார்­ம­ய­மாக்­கும் எண்­ணத்தை ஒன்­றிய அரசு முற்­றி­லு­மாக கைவி­ட­ வேண்­டும்.

மேலும் எனது தொகு­தி­யான தூத்­துக்­குடி நாடா­ளு­மன்­றத் தொகுதி என்­பது வணி­கர்­கள் அதி­க­முள்ள நக­ரம். ஆனால் சென்­னை-­­தூத்­துக்­குடி வழித்­த­டத்­தில் நாளொன்­றுக்கு ஒரு இர­யில் மட்­டுமே இயக்­கப்­ப­டு­கி­றது. இர­யில்வே அமைச்­ச­கம் கூடு­தல் இர­யில்­களை இவ்­வ­ழித்­த­டத்­தில் இயக்­க­வேண்­டும் உட­ன­டி­யாக முயற்சி மேற்­கொள்­ள­வேண்­டும் என்­றும், சென்­னை-­­தூத்­துக்­குடி வழித்­த­டத்­தில் வந்­தே­பா­ரத் இர­யில் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என­வும் கேட்­டுக்­கொள்­கி­றேன்.

மோடி அர­சின் புதுத்­திட்­டங்­கள் காலி பாத்­தி­ரங்­கள் சத்­த­மி­டு­வ­தை­போல் வெற்று முழக்­கங்­கள்­தான்!



கனி­மொழி  என்.வி.என்.சோமு:

-20 ரூ தண்­ணீர் பாட்­டில் 100 ரூபாய்.

- 50 ரூ. இட்லி 300 ரூபாய்.

- தற்­போது இந்­தி­யா­வில் சொந்த நாட்டு விமா­னங்­க­ளில் செல்­லக்­கூ­டி­ய­வர்­கள் இரு­வர் மட்­டுமே!

விமா­னப் போக்­கு­வ­ரத்தை தனி­யா­ருக்கு தாரை­வார்த்த ஒன்­றிய அரசை கண்­டித்­தும் புது விமான போக்­கு­வ­ரத்து மசோதா 2024 பற்­றி­யும் மக்­க­ள­வை­யில்  எம்.பி. டாக்­டர் கனி­மொழி என்.வி.என். சோமு பேசி­ய­தா­வது :

சட்­டங்­க­ளுக்கு இந்தி மற்­றும் சமஸ்­கி­ருத்­தில் பெயர் வைப்­பதை ஒன்­றிய அரசு தவிர்க்­க­வேண்­டும். தொடர்ந்து மசோ­தாக்­களை இந்­தி­யில் முன்­மொ­ழி­வது மூலம் இந்தி பேசாத மக்­கள்­மீது ஒன்­றிய் அரசு இந்­தியை திணிப்­பது முறை­யல்ல.

இந்­திய அரசு விமா­னங்­கள் தயா­ரிப்­ப­தில்லை, அர­சுக்கு சொந்­த­மாக விமான நிலை­யங்­கள் இல்லை. ஆனால் விமான தயா­ரிப்பு தொழில்­நுட்­பங்­களை மேம்­ப­டுத்­து­தல் குறித்து இந்த மசோ­தா­வில் குறிப்­பி­டப் பட்­டுள்­ளது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. இந்­தி­யா­வில் மேக் இன் இந்­தியா எனும் முழக்­கம் வெறும் முழக்­க­மாக மட்­டுமே இருக்­கி­றது. அதே­போல் ஸ்டேண்ட்-­­அப் இந்­தியா முழக்­கம் ஸ்டேண்ட்-­­அப் காமெ­டி­யா­கி­விட்­டது.

காலி பாத்­தி­ரங்­கள் சற்று அதி­க­மாக சத்­த­மி­டு­வ­தை­போல கடந்த பத்­தாண்­டு­க­ளில் மோடி­யின் பாஜக அரசு        உரு­வாக்­கி­யுள்ள எண்­ணற்ற முழக்­கங்­கள் வெற்று முழக்­கங்­க­ளாக மட்­டுமே உள்­ளன.

இந்த மசோதா விமா­னங்­கள் தயா­ரிக்­கும்­மு­றைக்கு சட்­டங்­கள் இயற்­ற­வும், விமான பாது­காப்பை உறு­தி­செய்­ய­வும், விமான விபத்­து­களை ஆய்வு செய்­ய­வும் ஒன்­றிய அர­சுக்கு அதி­கா­ரம் அளிக்­கும் வகை­யில் இயற்­றப்­பட்­டுள்­ளது. உண்மை என்­ன­வென்­றால் விமா­னத் தயா­ரிப்பு, போக்­கு­வ­ரத்து, விமான நிலை­யங்­கள் தொடர்­பான அத்­தனை நிறு­வ­னங்­க­ளும் (ராஜிவ்­காந்தி தேசிய விமா­னப் பல்­க­லை­க­ழ­கம் உட்­பட) ஏற்­க­னவே போது­மான சட்­டத்­திட்­டங்­கள் இயற்­ற­பட்டு அதன்­படி இயங்கி வரு­கின்­றன. விமான போக்­கு­வ­ரத்து மசோதா 2024 என்­கிற பெய­ரில் ஒன்­றிய அரசு அரைத்த மாவையே மீண்­டும் அரைத்­தி­ருக்­கி­றது.

விமான போக்­கு­வ­ரத்தை முற்­றி­லும் தனி­யார் மய­மாக்­கி­ய­தன் விளை­வாக விமான போக்­கு­வ­ரத்­து­துறை        அமைச்­ச­கம் தனது அதி­கா­ரத்தை இழந்­தி­ருக்­கி­றது. வருங்­கா­லத்­தில் நாட்­டில் பேரி­டர் காலங்­க­ளில் மக்­களை காப்­பாற்ற விமான போக்­கு­வ­ரத்து தேவை­யென்­றால்­ கூட தனி­யா­ரி­டம் கையேந்தி நிற்­க­வேண்­டிய அவ­ல­நி­லையை இந்த அரசு உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

ஏர் இந்­தி­யாவை அடி­மாட்டு விலைக்குவிற்­றது மட்­டு­மல்­லா­மல் விமான நிலை­யங்­க­ளை­யும் அரசு விற்­று­விட்­டது.

நாட்­டில் தற்­போது அரசு விமா­னங்­க­ளில் செல்­லக்­கூ­டிய வசதி படைத்­த­வர்­கள் இரு­வர் மட்­டுமே. ஒரு­வர் பிர­த­மர் மற்­றொ­ரு­வர் குடி­ய­ர­சுத் தலை­வர். ஆனால் மக்­க­ளா­கிய நாம் எல்­லோ­ரும் தனி­யார் விமா­னங்­க­ளையே நம்பி இருக்­கி­றோம்.

விமா­னக் கட்­ட­ணங்­கள் சூதாட்ட விளை­யாட்டை போல் அன்­றா­டம் ஏறு­வதை தடுத்து இர­யில்வே பய­ணக்­கட்­ட­ணங்­களை போல் நிலை­யான விலையை அரசு நிர்­ண­யம் செய்­ய­வேண்­டும்.

அதே­போல் வெளி­யில் 20 ரூபாய்க்கு விற்க்­கப்­ப­டும் தண்­ணீர்­பாட்­டில் விமான நிலை­யத்­தி­னுள் 100 ரூபாய்க்கு விற்க்­கப்­ப­டு­கி­றது. வெளி­யில் 50 ரூ விற்­கப்­ப­டும் இட்லி உள்ளே 300 ரூ விற்­கப்­ப­டு­கி­றது. இது­போன்ற கார­ணங்­க­ளால் சாமா­னிய மக்­க­ளுக்கு விமான பய­ணங்­கள் அணு­கக்­கூ­டி­ய­தாக இல்லை என்­பதை ஒன்­றிய அரசு நினை­வில் கொண்டு மாற்­றத்தை கொண்டு வர­வேண்­டும்.

தமிழ்­நாட்­டில் தேசிய நெடுஞ் சாலைத் திட்­டங்­க­ளின் நிலை என்ன?





டி.பி.டி .மலை­ய­ர­சன்:

தமிழ்­நாட்­டில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் நிறை­ வேற்­றப்­பட்ட மற்­றும் நிலு­வை­யில் உள்ள தேசிய நெடுஞ்­சாலை (NH) திட்­டப்­ப­ணி­கள் குறித்த விவ­ரங்­களை ஒவ்­வொரு திட்­டத்­திற்­கான மொத்த நீளம் மற்­றும் செலவு உட்­பட  வெளி­யிட வேண்­டும் என கள்­ளக்­கு­றிச்சி தொகுதி எம்.பி டி. மலை­ய­ர­சன் மக்­க­ள­வை­யில் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

அதே­போல் அடுத்து வரும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு தமிழ்­நாட்­டில் செயல்­ப­டுத்­த­வி­ருக்­கும் NH திட்­டங்­க­ளின் விவ­ரங்­கள் மற்­றும் அதற்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யின் விவ­ரங்­க­ளை­யும் கேட்­டுள்­ளார்.

தமிழ்­நாடு முழு­வ­தும் தேசிய நெடுஞ்­சா­லை­க­ளின் கீழ் செல்­லும் பல்­வேறு நிலு­வை­யில் உள்ள பாதாள சாக்­கடை கட்­டு­மா­னங்­க­ளின் விவ­ரங்­க­ ளை­யும், அவற்றை முடிப்­ப­தற்கு அரசு நிர்­ண­யித்­தி­ருக்­கும் இலக்கு குறித்த            விவ­ரங்­க­ளை­யும் அரசு வெளி­யி­ட­ வேண்­டும் என கேட்­டுள்­ளார்.

   



சிறுவேடல்க.செல்­வம்

பல்­வேறு திட்­டங்­க­ளின் கீழ் கிரா­மப்­புற மற்­றும் நகர்ப்­பு­றங்­க­ளில் தற்­போது நடை­மு­றை­யில் உள்ள நீர் வழங்­கல் திட்­டங்­க­ ளின் எண்­ணிக்கை விவ­ரங்­களை ஒன்­றிய அரசு வெளி­யிட வேண்­டும் என மக்­க­ள­வை­யில் காஞ்­சி­பு­ரம் எம்.பி. க.செல்­வம் மற்­றும் திரு­வண்­ணா­மலை எம்.பி. சி.என். அண்­ணா­துரை இணைந்து கூட்டு அறிக்­கை­யில் கேட்­டுள்­ள­னர்.





சி.என். அண்­ணா­துரை

தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கும் நீர் வழங்­கல் திட்­டங்­களை முடிக்க அரசு நிர்­ண­யித்­தி­ருக்­கும் காலக்­கெடு என்ன ?

கிரா­மப்­பு­றங்­க­ளில் சரி­யான நேரத்­தில் நீர் விநி­யோக திட்­டங்­களை முடிக்க அரசு எதிர்­கொண்ட சவால்­கள் என்ன?

நீர் வழங்­கல் திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வ­தில் ஒன்­றிய அரசு தனி­யார் துறையை ஈடு­ப­டுத்த முயற்சி                செய்­கி­றதா? அப்­ப­டி­யென்­றால் அதன் விவ­ரங்­க­ளை­யும் அரசு வெளிப்­ப­டை­யாக அறி­விக்­க­வேண்­டும்.


அதி­க­பட்ச மின் தேவையை எப்­படி சமா­ளிக்க போகி­றது ஒன்­றிய அரசு?





டி.எம்.செல்­வ­க­ண­பதி :

திடீ­ரென ஏற்­ப­டும் அதி­க­பட்ச மின் தேவை போன்ற சவால்­களை எதிர்­கொள்ள மேற்­கொள்­ளப்­ப­டும் ஆய்­விற்­காக மத்­திய மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யம் ஒற்­றை-­­உ­றுப்­பி­னர் பெஞ்சை நிய­மித்­தது மற்­றும் அந்த ஆணை­யத்­தின் ஆய்­வ­றிக்கை தொடர்­பான விவ­ரங்­களை வெளி­யி­டு­மாறு சேலம் மக்­க­ளவை தொகுதி உறுப்­பி­னர் செல்­வ­க­ண­பதி இன்று கேள்வி       எழுப்­பி­யுள்­ளார்.

அவர் தனது அறிக்­கை­யில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது :

வரும்­கா­லத்­தில் உச்ச மின் தேவை 232.2 GW ஆக இருக்­கும் என்­கிற கணிப்பு உண்­மை­யாக இருந்­தால் அதை எதிர்­கொள்ள ஒன்­றிய அர­சி­டம் இருக்­கும் திட்­டங்­கள் என்ன ?

சுமார் 12.60 GW (3% இருப்­புத் தேவை­யு­டன்) மின்­சா­ரம் உற்­பத்தி செய்­வ­தற்­கான வளங்­களை கூடு­த­லாக தயா­ரித்து வைக்­க­வேண்­டும் எனும் செய்தி உண்­மை­யென்­றால் அதற்கு அரசு எடுத்­தி­ருக்­கும் நட­வ­டிக்­கை­கள் என்ன ?

தேசிய, பிராந்­திய, மாநில மின் பகிர்வு நிலை­யங்­கள் கிரிட் விதி­களை பின்­பற்ற எடுத்­தி­ருக்­கும் நட­வ­டிக்­கை­கள் குறித்த அறிக்­கையை சமர்­பிக்க வேண்­டும் மேற்­கு­றிப்­பிட்ட ஆணை­யம் வலி­யு­றுத்­தி­யி­ருப்­ப­தன் விவ­ ரங்­களை வெளி­யிட வேண்­டும்.

தமிழ்­நாட்­டில் அகழ்­வா­ராய்ச்­சி­களை மேற்­கொள்­வ­தற்­காக போதிய நிதி ஒதுக்­கப்­ப­டு­கி­றதா?




 எம்.எம்.அப்­துல்லா

இந்­திய தொல்­லி­யல் துறை­யால் (ASI) கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டில் நடத்­தப்­பட்ட அக­ழாய்வு பணி­கள் என்­னென்ன? என்­றும் அதற்­காக போதிய நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளதா? என்­றும் திமுக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.எம்.அப்­துல்லா மாநி­லங்­க­ள­வை­யில் கேள்­வி­களை எழுப்­பி­னார்.

Tags:    

Similar News