முரசொலியின் பத்திரம் எங்கே ? வழக்கு முடிந்தது - உச்சநீதிமன்றம்

Update: 2024-12-06 07:32 GMT

முரசொலி 

எல்.முருகன் பேச்சு மீதான வழக்கில்

‘முரசொலி’ நிலைப்பாடு பெருந்தன்மையானது!

வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் பாராட்டு!

முர­சொலி நிலம் குறித்து பா.ஜ.க. மூத்த தலை­வர் தற்­போது ஒன்­றிய அர­சில் அமைச்­ச­ராக இருக்­கும் எல்.முரு­கன் பேசி­ய­தற்கு முர­சொலி அறக்­கட்­டளை சார்­பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்­கில், எல்.முரு­கன் சார்­பில் தாம் கெட்ட எண்­ணத்­தில் பேச­வில்லை என நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­த­தால் வழக்கை முடித்து வைக்­க­லாம் எனமுர­சொலி அறக்­கட்­டளை சார்­பில் உச்­ச­நீதி மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­ட­து. இதனை யடுத்து ‘முர­சொ­லி­யின் நிலைப்­பாடு பெருந்­தன்­மை­யா­னது’ எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உச்­ச ­நீ­தி­மன்­றம் முரசொலி அறக்கட்டளையை பாராட்­டி­யுள்­ளது.


முர­சொலி நிலத்­திற்­கான மூலப்­பத்­தி­ரம் எங்கே? என்று பா.ஜ.க. மூத்த தலை­வர் எல்.முரு­கன் பேசி­ய­தற்கு முர­சொலி அறக்­கட்­டளை சார்­பாக ஆலந்­தூர் ஆர்.எஸ்.பாரதி அவ­தூறு வழக்­கினை சென்னை மெட்ரோ பாலி­டன் மாஜிஸ்­தி­ரேட்­டில் தொடர்ந்­தார்.

அதை எதிர்த்து எல்.முரு­கன் உயர்­நீதி மன்­றத்­தில் தொடுத்த வழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

அந்த உத்­த­ர­வினை எதிர்த்­தும், தன்­மீது உள்ள வழக்கை ரத்து செய்­யக் கோரி­யும் உச்ச நீதி­மன்­றத்­தில் எல்.முரு­கன் வழக்­குத் தொடர்ந்­தார்.

அந்த வழக்கு நேற்று (5.12.2024) உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் மாண்­பு­மிகு நீதி­ப­தி­கள் பி.ஆர்.கவாய் மற்­றும் கே.வி. விஸ்­வ­நா­தன் ஆக­யோர் முன்பு விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது எல்.முரு­கன் தரப்­பில் முர­சொலி மீது அவ­தூறு கற்­பிக்க வேண்­டும் என்ற எண்­ணம் தனக்கு இல்லை என்­றும், எந்த ஒரு கெட்ட உள்­நோக்­கத்­து­ட­னும் அந்­தக் கருத்­தைச் சொல்­ல­வில்லை என்­றும், அர­சி­யல் ரீதி­யாக பதி­யப்­பட்ட கருத்து என்­றும் சொல்­லப்­பட்­டது.

தனக்கு கெட்ட எண்­ணம் இல்லை என்ற கருத்தை எல்.முரு­கன் சொன்­ன­தால் அந்த வழக்கை முடித்து வைக்­க­லாம் என்று முர­சொலி அறக்­கட்­டளை தரப்­பில் மூத்த வழக்­க­றி­ஞர்­கள் சித்­தார்த் லூதுரா மற்­றும் என்.ஆர்.இளங்கோ ஆகி­யோர் கூறி­ய­தன் அடிப்­ப­டை­யில் முர­சொலி அறக்­கட்­ட­ளை­யின் அறங்­கா­வ­ல­ராக ஆலந்­தூர் -



-ஆர்.எஸ்.பாரதி எடுத்த இந்த நிலைப்­பாடு பெருந்­தன்­மை­யா­னது என்று பதிவு செய்து உச்­ச­நீ­தி­மன்­றம் பாராட்டி வழக்கை முடித்து வைத்­தது.

Tags:    

Similar News