நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

Update: 2023-12-17 03:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழக செயற்குழு கூட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலயம் இனமானப் பேராசிரியா் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் வரவேற்றார். வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறப்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமை தாங்கி பேசும் போது, சேலம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவா்கள் பேருரையாற்றுகிறார். இம்மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 8000, சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 6500, இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 8500 என மொத்தம் 23,000 கழக இளைஞர் அணியினர் வெண் சீருடையில் திரளாக மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திருவொற்றியூர் பகுதியில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன என்றார்.

கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர பேரூர் திமுக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் கு.காளியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News