திண்டிவனத்தில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம்

திண்டிவனத்தில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-29 04:36 GMT

புதிய அலுவலக கட்டிடம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கான கட்டிடம் பழுதடைந்து உள்ளதால், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 4 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் தாலுகா அலுவலகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு புதிய கட்டிடம் அதேபகுதியில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, இதற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திண்டிவனம் சப்-கலெக்டர்(பொறுப்பு) தமிழரசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, உதவி செயற்பொறியாளர்கள் கணேசன் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் தாசில்தார் சிவா, நகர செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சேது நாதன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஷீலாதேவி சேரன், நகராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றி வேல், கவுன்சிலர் ராம்குமார், மரக்கா ணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன், துணைத் தலைவர் பழனி, தி.மு.க. மயிலம் ஒன்றிய செய லாளர் மணிமாறன், நிர்வாகிகள் ஆதித்தன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News