பாஜகவுடன் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது: முன்னாள் அமைச்சர்

இனி வருங்காலங்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது நாடு முழுக்க வெற்றி பெறும் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-26 16:17 GMT

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் 

அதிமுக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி தலைமை வைத்தார்.

மாவட்ட செயலாளர்கள் பாரதிமோகன், பவுன்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராம்குமார் ,இளமதி சுப்பிரமணியன் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் துரை சண்முகம் பிரபு, ஆகியோர் முன்னில வகித்தனர்.

பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தியாக பழனிச்சாமி வரவேற்று பேசினார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ் மணியன், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கலந்துகொண்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாபுவை அறிமுகம் செய்து வைத்து செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

இதை தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபு பேசுகையில் தான் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றால் பாபநாசம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதிமுகவின் முன்னாள் ஜவுளித்துறை அமைச்சர் ஓ .எஸ். மணியன் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : இனி வருங்காலங்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது. தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து நாடு முழுக்க வெற்றி பெறும் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் காந்தி, மாவட்ட பொருளாளர் கண்ணபிரான், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,

பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் தேமுதிக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமாரன் ,எஸ்டிபிஐ கட்சி மாவட்ட பொறுப்பாளர் சலீம் மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ,அதிமுக பொறுப்பாளர்களும்,நகர செயலாளர்களும் கலந்து கொண்டு கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் சூரியநாராயணன்

Tags:    

Similar News