ஓபிஎஸ் vs ஓபிஎஸ் - ராமநாதபுரத்தில் குழப்பம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் நிலையில் அவருக்கு போட்டியாக ஓ பன்னீர் செல்வம் என்ற பெயரில் சுயேச்சை வேட்பாளரை அதிமுக களம் இறக்கியுள்ளது.

Update: 2024-03-26 05:14 GMT

ஓ.பன்னீர் செல்வம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்

நேற்று காலை ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் அலுவலரான விஷ்ணு சந்திரனிடம் ஓ பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனிடையே ஓபிஎஸ்க்கு குழப்பம் ஏற்படுத்தும் விதமாக அதிமுக (இபிஎஸ் அணி) ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டி சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்பவர் சுயேட்சை வேட்பளராக மனு தாக்கல் செய்துள்ளார்.

ஓ பன்னீர் செல்வம் பெயரில் அதிமுக மேலும் மூன்று சுயட்சை வேட்பாளர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் சுயட்சை வேட்பாளராக களம் கானும் ஓபிஎஸ்க்கு ஒரே பெயரில் சுயட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டும் என்பதற்காக அதிமுக இவ்வாறு வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

Similar News