விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By : King 24x7 Website
Update: 2023-10-26 03:46 GMT
விழுப்புரம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு உயரம் வளர்ச்சி மாவட்ட அமைப்புக்குழு தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராதாகி ருஷ்ணன், மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளர் ஜெயக்குமார், துணை செயலாளர் முத்துவேல் ஆகி யோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளை கடும் ஊன முள்ளவர்களாக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும், உயரம் தடைபட்டோர் வாழ்வதற்கான சிறப்பு வசதிகளுடன் அரசு இலவச வீடுகள் வழங்க வேண்டும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து அரசு பஸ்களிலும் தாழ்வான படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். உயரம் தடைபட்டவர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு தங்கும் விடுதிகள் உருவாக்கித்தர வேண்டும்.கல்வி, வேலைவாய்ப்பில் சிறப்பு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் கைகோர்த்து நின்றவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.