தாராசுரம் காய்கறி சந்தையில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
கும்பகோணம் தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்று பாமக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றான கும்பகோணம் அருகே தாராசுரம் அறிஞர் அண்ணா நேரு காய்கறி சந்தையில் அதிகாலையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு இணைந்து தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
500க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி கடைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தரப்படும் என வாக்குறுதி அளித்து தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மேலும் காய்கறி கடைகளில் அமர்ந்து மாங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை பொதுமக்களுக்கு வியாபாரம் செய்தும், காய்கறி மூட்டைகளை தூக்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.மேலும் இரவு பகல் பாராமல் உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.முன்னதாக காய்கறி சந்தையின் நுழைவாயிலில் விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.