வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் - திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் பங்கேற்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-04 07:02 GMT
வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் - திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் பங்கேற்பு
தர்மபுரி மாவட்டம் திமுக சார்பில் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கோபிநாதம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி துணை செயலாளரும் அரூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ரா.தமிழரசன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக திமுக தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு தேர்தல் பணியில் செயல்படுவது சேலத்தில் நடைபெறும். இளைஞரணி மாநில மாநாட்டிற்கு அதிகளவில் பங்கேற்பது, கிராமங்கள் தோறும் இளைஞர்களை ஒருங்கிணைப்பது, நீட் தேர்வு விலக்கு அளிக்கும் கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்துவது ஆலோசனைகள் வழங்கினார். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், மாநில ஆதிதிராவிடர் நலகுழு துணை செயலாளர் சா.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கோ.சந்திரமோகன், நெப்பொலியன், முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கோடீஸ்வரன், மாவட்ட செயலாளர் நேர்முக உதவியாளர்கள் சக்தி, தமிழ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.